அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரில் ஜெ. பட்டபாடு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட்டம் கூடவில்லை. இதனால் பலஇடங்களில் பொதுக் கூட்டங்களையும் மேடைகளையும் தவிர்த்துவிட்டு வேனில் இருந்தபடியே பேசிவிட்டுப் போனார்.
அதிமுகவினரின் வன்முறை, ரெளடிகள் நடமாட்டத்தால் சாத்தான்குளம் திணறி வருகிறது. ஏகப்பட்ட அளவில் அதிமுகவினர் பணம்செலவிட்டாலும் மக்கள் மத்தியில் ஆதரவில்லை.
எங்கு நோக்கினும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள், அதிமுக தோரணங்கள் தான் காட்சி தருகின்றன. தொகுதியையே அதிமுகவினர்தங்களது பிரச்சாரத்தால் கலங்கடித்தாலும் மக்கள் மத்தியில் எரிச்சல் தான் மிஞ்சியுள்ளது.
அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணத்தின் சொந்த ஊரான படுகப்பத்தில் ஜெயலலிதாவுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. நேற்றிரவுஇந்த ஊருக்கு ஜெயலலிதா வருகை தந்தார். இதையொட்டி அங்கு மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தமேடையில் ஜெயலலிதா பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜெயலலிதாவின் 50 கார்கள் கொண்ட அணிவகுப்பு அங்கு வந்தபோது சில தலைகள் தான் காணப்பட்டன. இதனால் மூட் அவுட்ஆன ஜெயலலிதா மேடை ஏற மறுத்துவிட்டார். தொகுதியில் தேர்தல் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாமுறைக்க, அவர் மற்ற அமைச்சர்கள் பின்னால் போய் மறைந்தார்.
இங்கு நடக்க இருந்த பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. கையில் மாலைகளோடு சிலர் காத்திருந்தனர். அவர்களிடம் ஓடிய அமைச்சர்அன்வர்ராஜா, அம்மா மேடையில பேச மாட்டாங்க. அந்த மாலைகளை காமராஜரின் சிலைக்குப் போடுங்கள் என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலைகளை அணிவித்தனர்.
கூட்டம் இல்லாததால் கடுகடுப்பில் இருந்த ஜெயலலிதா அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரியில் 3 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டுவேனைக் கிளப்புமாறு உத்தரவிட்டார்.
இந்த ஊரில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. சுமார் 1,500 பேர் உள்ளனர். இவர்களில் பல குடும்பஙகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும்மளிகைக் கடை வைத்து நடத்தி வருகின்றன. தேர்தல் தினத்தன்று இவர்களை எப்படியாவது சாத்தான்குளத்துக்கு இழுத்து வர வேண்டும் எனஅதிமுகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் குடும்பங்களின் வெளியூர் முகவரிகளைத் திரட்டும் பணியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.ஆனால், தங்கள் வேலைகளைப் போட்டுவிட்டு அவர்கள் இங்கு வருவார்களா என்று தெரியவில்லை.
விபத்தில் சிக்கிய பாதுகாப்பு போலீசார்:
இதற்கிடையே ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகச் சென்ற போலீசாரின் வேன் விபத்துக்குள்ளானது. இதில் 6 போலீசார்படுகாயமடைந்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்புப் பணியில் மட்டும் சுமார் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீசார்குவிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து வந்த அதிரடிப்படை போலீசாரின் வேன் குலசேகரப்பட்டினம் அருகே மரத்தில்மோதியது. இதில் காயமடைந்த 6 பேரும் மதுரை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications