For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இராக்கை தாக்க அமெரிக்கா தீவிரம்: இந்தியா மீண்டும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஐ.நா. சபை:

உலக மக்களின் எதிர்ப்பையும் மீறி இராக் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு இந்தியா மீண்டும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.

இராக்கைத் தாக்கும் அமெரிக்காவின் திட்டத்தை எதிர்த்து இரு நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் மாபெரும் கண்டனப் பேரணிகள்நடந்தன. லண்டன், பிரான்ஸ், பிராங்பர்ட் போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் இவ்வளவு பெரிய பேரணிகள் நடந்ததே இல்லை என இங்கிலாந்து வெளியுறவுஅமைச்சர் ஜேக் ஸ்டாராவே கூறியிருக்கிறார்.

இராக்கில் அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என ஐ.நா. ஆய்வாளர்களின் தலைவர்பிலிக்ஸ் அறிவித்துவிட்டார். இதனால் இராக்கை தாக்க வேண்டிய அவசியமே இல்லை என பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள்கூறிவிட்டன.

இது தொடர்பாக நேடோ நாடுகள் அமைப்பில் அமெரிக்காவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.ஆனால், விட்டுத் தர முடியாது என ஜெர்மன் அதிபர் ஷிரேடரும், பிராஞ்சு அதிபர் கைராக்கும் தெரிவித்துவிட்டனர்.

இந் நிலையில் இராக் மீது தாக்குதல் நடத்துவதை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இரண்டாவதாக ஒருதீர்மானம் கொண்டு வர அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டமிட்டுள்ளன.

இந்தத் தீர்மானவே தேவையில்லை என சீனாவும் பிரான்சும் கூறியுள்ளன. மீறி தீர்மானம் கொண்டு வந்தால் அதை தங்களது வீடோஅதிகாரத்தை வைத்து ரத்து செயயப் போவதாகவும் அறிவித்துள்ளன.

இந் நிலையில் இராக் மீது தாக்குதல் நடத்துவதை இந்தியா மீண்டும் எதிர்த்துள்ளது. ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் வி.கே. நம்பியார்பாதுகாப்புக் கவுன்சில் கூறியதாவது:

உலகமே இந்தப் போரை எதிர்க்கிறது. ஆனால், உலக மக்களின் கருத்தை ஒதுக்கிவிட்டு தாக்குதல் நடத்தத் தயாராவது சரியான செயல்அல்ல. போர் என்பது கடைசி ஆயுதமாகத் தான் இருக்க வேண்டும். போரினால் அப் பகுதி மக்களுக்கு சொல்ல முடியாத வேதனைகள் தான்மிஞ்சும்.

ஏற்கனவே பிரச்சனையில் உள்ளது வளைகுடா பகுதி. அங்கு போர் என்பது மிகப் பெரிய அழிவையும் கடும் விளைவுகளையும் தான்ஏற்படுத்தும். வளைகுடாவில் வசிக்கும் லட்சணக்கான இந்தியர்களும் பாதிக்கப்படுவர். இதனால் அங்கு எந்தவிதமான போர் நடப்பதையும்இந்தியா விரும்பவில்லை என்றார்.

பெயஜிங்கில் சீன அமைச்சர் டேங் ஜியாஹூவான் கூறுகையில், ஐ.நா. ஆய்வாளர்கள் தங்கள் சோதனைகளை இராக்கில் தொடரலாம்.அதற்குள் தாக்குதல் நடத்துவது தேவையே இல்லை. இது தொடர்பாக அமெரிக்கா இரண்டாவது தீர்மானம் கொண்டு வரவும் அவசியம்இல்லை என்றார்.

இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் கைராக்கும் தீவிரமாகவே இருக்கிறார். அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை வீடோஅதிகாரத்தை வைதது ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளார். இத் தகவலை அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் டெவில்லிபென் தெரிவித்தார்.

பிரான்ஸ் தவிர சீனா, ரஷ்யாவுக்கும் வீடோ அதிகாரம் உள்ளது. இந்த நாடுகளும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இராக்கைத் தாக்க எங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியே தேவையில்லை என அமெரிக்க அதிபர் புஷ்கூறியுள்ளார். ஐ.நாவில் தீர்மானத்தை மற்ற நாடுகள் நிராகரித்தாலும் இராக்கைத் தாக்குவோம் என்றார்.

ஆனால், ஐ.நாவை மீறி இராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவுக்கு பிரிட்டனே கூட ஆதரவு தராது என்று கூறப்படுகிறது. பிரிட்டனில்நடந்த 20 லட்சம் மக்கள் பங்கேற்ற மிகப் பெரிய பேரணி அந் நாட்டு ஆளும் கட்சியையும் பிரதமர் டோனி பிளேரையும் கலங்கடித்துள்ளது.மக்களை மீறி எதையும் செய்ய முடியாது என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ட்ரா கூறியுள்ளார்.

இதற்கிடையே போர் அபாயம் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு உயர்ந்துளளது. கடந்தஇரண்டு ஆண்டுகளில் இது தான் மிகப் பெரிய உயர்வாகும்.

வெனிசுவேலாவில் நடந்து வரும் பெட்ரோலிய தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்காவில் பெட்ரோலிய இருப்பு கடந்த 27ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. இந் நிலையில் போர் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு பெரும் சிரமம் உண்டாகும்என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் பெட்ரோலியம் இருந்தாலும் அதை இன்னும் அந் நாடு முழு அளவில் பயன்பாட்டுக்கு எடுக்கவில்லை. இறக்குமதி தானசெய்து வருகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X