அப்துல் கலாம் வருகை: கோவை பந்த் ஒத்திவைப்பு
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் நாளை (20ம் தேதி) தமிழகம் வருகிறார். வெள்ளிக்கிழமை அவர் கோயம்புத்தூர்வருவதால் அங்கு நாளை நடத்தப்பட இருந்த பந்த் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பவானி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை கேரள போலீசாரும் ரெளடிகளும் தாக்கியதைக் கண்டித்து நாளைகோவை மற்றும் ஈரோட்டில் பந்த் நடத்த அனைத்துக் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
ஆனால், நாளை மறுதினம் (21ம் தேதி) அப்துல் கலாம் கோவை வருவதால் நாளை நடக்க இருந்த பந்த்தை ஒத்திவைக்க அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் திட்டமிட்டபடிநாளை பந்த் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடிசை வாழ் சிறுவர்களுக்கான கண் சிகிச்சை திட்டத்தை அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இதற்காக அப்துல்கலாம் (நாளை) சென்னை வருகிறார். இரவு 10.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துஇறங்கும் கலாம் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அவர் ஹெலிகாப்டர்மூலம் பாண்டிச்சேரி செல்கிறார். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு, பாண்டிச்சேரியின் அமைக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கிளையை கலாம்திறந்து வைக்கிறார்.
பின்னர் பிற்பகல் 2 மணிக்கு திருப்பூர் செல்கிறார். பின்னலாடைத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின்வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து கோவை செல்கிறார். இந்தியத் தொழிலகங்களின்கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை கே.ஜி. கண் மருத்துவமனைக்கு செல்கிறார். குடிசைவாழ் சிறுவர்களுக்கானஇலவச கண் மருத்துவ சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பிறகு இரவு 8 மணிக்கு கோவையிலிருந்து டெல்லி புறப்படுவார் கலாம்.
கலாம் டெல்லி திரும்பிய பின்னர் வேறு ஒரு தேதியில் தான் கோவையில் பந்த் நடத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கலாமிடம் மனு தர நிருபர்கள் திட்டம்:
பவானியின் குறுக்கே அணை கட்டப்படுவதைப் பார்வையிடச் சென்றபோது தங்களை கேரள போலீசாரும் ரெளடிகளும் வழி மறித்துத் தாக்கியது குறித்துஅப்துல் கலாமிடம் புகார் மனு தர கோவை விவசாயிகளும் நிருபர்களும் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் இத் தாக்குதலைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்பாட்டப் பேரணியும் நடத்தப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications