சட்டசபை, சத்த சபையாகி விட்டது: கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா ஆட்சியில சட்டசபை கூட சத்த சபையாக மாறிவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திராவிட இயக்கத்தின் 90வது ஆண்டுவிழா மற்றும் திராவிட இயக்கநிறுவனர்களில் ஒருவரான டாக்டர் நடேசனின் 66-வது நினைவு நாளையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில்கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட முடியுமோ அந்த அளவுக்குஅவமரியாதை செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களை, உறுப்பினர்களை அவமானப்படுத்துவதேஜெயலலிதாவின் முக்கிய வேலையாகிவிட்டது.
இப்போதையமுதல்வருக்கும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அப்போதைய நிதியமைச்சர் நாஞ்சில் மனோகரன் கூறிய சிலகருத்துக்களால் அதிருப்தியடைந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர் மனோகரனின் பேச்சுக்காகமன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இன்னொரு முறை நான் எனது மகன் அழகிரி பெயரில் மதுரையில் நிலம் வாங்கி விட்டதாகக்கூறி போலியானஆவணத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அப்போதைய அமைச்சர் குழந்தைவேலு திட்டமிட்டிருந்தார்.இதையறிந்த எம்.ஜி.ஆர். அது தொடர்பான பிரச்சினை சட்டசபைக்கே வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இப்போது சட்டசபையில் என்ன நடக்கிறது. சட்டசபையை வெறும் சத்தசபையாக மாற்றிவிட்டார்கள். ஜனநாயகம்குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் நடத்தை குறித்துப் பேச வேண்டியதேஇல்லை. அந்த அளவுக்கு அநாகரீகம் தலைவிரித்து ஆடுகிறது.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குறித்தும் திமுக எம்.எல்.ஏக்கள் குறித்தும் சமீபத்தில்ஜெயலலிதா கூறிய கருத்துக்கள் அவருக்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம் ஆனால், அவர் வகிக்கும்பதவிக்கு உகந்தவை அல்ல என்றார் கருணாநிதி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications