தேர்தல் பயம்: குமாரதாஸ் மீது கண்துடைப்பு வழக்கு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் மற்றும் ரெளடிகள் துணையுடன் காங்கிரஸ் மற்றும் மதிமுக தொண்டர்களைத் தாக்கிய தமிழ் மாநிலகாமராஜ் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியை உடைத்து த.மா.கா.காவை உருவாக்கி நடத்தி வருகிறார் குமாரதாஸ். இக் கட்சியில் இருந்தமணி நாடார் இறந்ததால் தான் சாத்தான்குளத்தில் இடைத் தேர்தலே நடக்கிறது.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பெரிய அளவில் தங்களுக்கு ஆதரவு ஏதும் கிடைக்காததால் பல பகுதிகளில் இருந்தும்ரெளடிகளையும் அதிமுகவிரையும் கொண்டு வந்து இறக்கியுள்ளது அதிமுக. இவர்களைக் கொண்டு கள்ள ஓட்டுக்கள் குத்தப்பட உள்ளதாகஎதிர்க் கட்சிகள் அலறி வருகின்றன.
இதை உறுதி செய்யும் வகையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் காங்கிரஸ், மதிமுக தொண்டர்களை அதிமுகவினர் மற்றும் ரெளடிகள்உதவியுடன் தாக்கினார் குமாரதாஸ். ஒரு பக்கம் காங்கிரஸ் அலுவலகத்தை உடைத்தெறிந்த இக் கும்பல் மறுபக்கம் பூட்டிக் கிடந்தகடைகளையும் உடைத்தது.
இதனால் மக்கள் திரண்டெழுந்து அதிமுகவினருக்கு எதிராக போராட்டமும் பந்த்தும் நடத்தினர். முதலில் சாத்தான்குளத்தில்குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ரெளடிகளை வெளியேற்ற வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.
மக்களின் போராட்டத்தால் நாசரேத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரம் கூட செய்ய முடியாமல் போய்விட்டது.
இந்த வன்முறையால் மக்கள் மனதில் அதிமுக மீது வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பிரச்சனையை சமாளிக்க குமாரதாஸ் மற்றும்அதிமுகவினர் மீதே வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து குமாரதாஸ் மற்றும் 50 பேர் மீது நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் குமாரதாஸைபோலீசார் கைது செய்யவில்லை. இதனால் இது தேர்தலை மனதில் வைத்து போடப்பட்டுள்ள ஒரு கண்துடைப்பு வழக்கு என்று தான்கருதப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுகவினர் கொடுத்த வழக்கை வைத்து 10 மதிமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு ப.சி. ஆதரவு:
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் பா.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக சாத்தான்குளத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள கட்சியின் எம்.எல்.ஏக்களான புரசைவாக்கம்ரங்கநாதன், வள்ளல்பெருமான் ஆகியோர் உள்பட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக் குழு வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் சாத்தான்குளம் சென்று பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று அக் கட்சி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கட்சியின் தலைவரான ப.சிதம்பரம் பிரசாரம் செய்வாரா என்று தெரியவில்லை. இது குறித்து இதுவரை எந்தத் தகவலும்தெரிவிக்கப்படவில்லை.
3வது நாள் பிரச்சாரம்:
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை மூன்றாவது நாளாக சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அல்வாவுக்கே அல்வா:
இந் நிலையில் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்சனையில் அதிமுக சிக்கியுள்ளது. சாத்தான்குளம் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க ஒரு லாரியில் சில்வர்குடங்கள் மதுரையில் இருந்து அனுப்பப்பட்டன.
ஆனால், அந்த லாரி சாத்தான்குளத்துக்கே வரவில்லை. இதையடுத்து போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் அதிமுகவினர் ஈடுபட்டனர். அப்போதுலாரியை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாம். அதில் இருந்த குடங்கள் பெரும்பாலானவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
அதிமுகவினரே இந்தக் குடங்களை சுட்டுவிட்டார்களா? அல்லது நெடுஞ்சாலைக் கொள்ளை ஏதும் நடந்ததா என்று தெரியவில்லை. இது குறித்து மூடிமறைக்கும் வேலைகள் நடப்பதால் முழு விவரமும் கிடைக்கவில்லை.
மத்திய படை தேவையில்லை: டி.ஜி.பி.
இந் நிலையில் சாத்தான்குளம் தேர்தலை சமாளிக்க மத்தியப் படை தேவையில்லை என டி.ஜி.பி. ராஜகோபாலன் கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒரு இடைத் தேர்தலை சமாளிக்கும் அளவுக்கு தமிழக போலீசாரிடம் அனைத்துத் திறமைகளும் உள்ளன. இந்த இடைத்தேர்தல் சிறப்பான முறையில் நடத்தப்படும் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications