என் உயிருக்கு விலை பேசுகின்றனர்: ஜெ. சொத்து குறித்து விசாரித்த அதிகாரி அச்சம்
சென்னை:
எனது உயிருக்கு அரசியல்வாதிகள் விலை பேசி வருகின்றனர் என முதல்வர் ஜெயலலிதாவின் மீதான லஞ்ச- ஊழல் வழக்கை விசாரித்தஅதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதா ரூ. 62 கோடி சொத்து சேர்த்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு.ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பல சாட்சிகளும் பல்டி அடித்துவிட்ட நிலையில் நாயுடு மட்டுமே தனது நிலையில்நேர்மையாக உள்ளார்.
அவர் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள், வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு, பிடிபட்ட பணம், நகைகள், ஆவணங்கள் ஆகியவிவரங்களை தைரியமாக நீதிமன்றத்தில் கூறி வருகிறார். இதனால் அவருக்கு அதிமுகவினரிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள்வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும் தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார். தனி நீதிமன்றத்தில் நீதிபதிராஜமாணிக்கம் முன் அவர் சாட்சியம் அளித்தபோது ஜெயலலிதாவின் வக்கீலும் அதிமுக எம்.பியுமான ஜோதி அவரை குறுக்கு விசாரணைசெய்தார்.
அதன் விவரம்:
ஜோதி: ஜெயலலிதா வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தீர்களா?
நல்லம்ம நாயுடு: இல்லை
ஜோதி: நீங்கள் படங்களைத் தந்துள்ளீர்கள். அவை வெளியாகியுள்ளன. எங்களிடமும் கட்சி இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள்எங்களிடம் உள்ளன.
நாயுடு: அரசியல் கட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு? உங்களுக்கு கட்சி இருப்பதை ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?உங்கள் பேச்சு வேதனை தருகிறது.
ஜோதி: (நீங்கள் விசாரணை நடத்தியபோது) ஜெயலலிதா எவ்வளவு வேதைனப்பட்டிருப்பார். அப்போது நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாகஇருந்தீர்கள், இப்போது வேதனைப்படுகிறீர்கள்.
நாயுடு: இந்த தரித்திரம் பிடித்த வாழ்க்கை எடுத்த பிறகு எனக்கு மகிழ்ச்சியும் கிடையாது. கத்திரிக்காயும் கிடையாது. அரசியல்வாதிகள்எனது உயிரை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் மருத்துவ செலவுகள் தொடர்பான விவரங்களைக் கூட வக்கீல் ஜோதிகுறிப்பிடுகிறார். இதனால் என் தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டியிருப்பது தெரிகிறது. இது எனக்கு பயத்தையும் பலசந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இதன் பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவரது ஆந்திர திராட்சைத் தோட்டங்களிலும் நடந்த விசாரணைகள் கிடைத்தநகைகள், சொத்துப் பத்திரங்கள் குறித்து நாயுடு விளக்கினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications