பொடா: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
டெல்லி:
பொடா சட்டத்துக்கு எதிராக இன்று மாநிலங்களைவில் கடும் அமளி ஏற்பட்டது.
தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் இந்தச் சட்டம் மிகவும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்முலாயம் சிங் யாதவ் நேற்று பிரச்சனையைக் கிளப்பினார்.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் உள்நாட்டுப் போர் மூளும் என்று அவர் கூறினார். இதை பல திர்க் கட்சியினரும் ஆதரித்துப்பேசினர். இதற்கு இன்று பதிலளித்துப் பேசிய துணைப் பிரதமர் அத்வானி, உத்தரப் பிரதேசத்தில் பொடா சட்டம் தவறாகப்பயன்படுத்தப்படவில்லை. தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை நீதிமன்றம் சொல்லட்டும் என்றார்.
அத்வானியின் இந்த பதிலால் எரிச்சலுற்ற எதிர்க் கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போட்டிக்கு பா.ஜ.கவினரும் கோஷம்போட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொடா சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
உ.பியில் தனது ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற ஒரு எம்.எல்.ஏவை பொடாவில் உள்ளே தள்ளியிருக்கிறார் அம் மாநில முதல்வர் மாயாவதிஎன்பது நினைவுகூறத்தக்கது.
மக்களவையிலும் கூச்சல்:
இதே போல லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து இன்றுமக்களவையிலும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. இதையடுத்து அங்கும் பெரும் கூச்சல்- குழப்பம் நிலவியது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications