கோவை குண்டு வெடிப்பு வழக்கு: தனி நீதிமன்ற விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கை தனி நீதிமன்றம் விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோயம்புத்தூரில் 17 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள்வெடித்தன. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி கொல்லப்பட்டனர்.
இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அப்துல் நாசர் மதானி,அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை கோயம்புத்தூரில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த2000ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட அரசே இலவசமாக வக்கீல்களை ஏற்பாடு செய்தது.
ஆனால் இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான முகமது அம்ஜத் அலி என்பவர், தனக்காக நியமிக்கப்பட்டிருந்ததன்ராஜ் கங்கன் என்ற வக்கீல் தேவையில்லை என்றும், தன் விருப்பப்படி வேறொரு வக்கீலைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அம்மனுவை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாகஅம்ஜத் அலி மேல் முறையீடு செய்தார். மேலும் அரசு தரப்பு சாட்சி விசாரணை தொடங்கியுள்ளதால் அதற்குத்தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு புதிய வக்கீல் நியமிக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதிதாக சாட்சிகளைவிசாரிக்க வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், வரும் 20ம் தேதி வரை தனி நீதிமன்றம் இவ்வழக்கின்விசாரணையை நடத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications