ராமர் கோவில் கட்டியே தீருவோம்: பா.ஜ,க.
சென்னை:
மத்தியப் பிரதேசத்தில் உள்ள, அயோத்தியைப் போலவே, பிரச்சனைக்குரிய புனிதத் தலத்தை திறக்க வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.
இந்துக்களால் போஜ்சாலா என்றும் முஸ்லீம்களால் கமாலா மெளலானா மசூதி என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலத்தால் மதக்கலவரம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க அதை மாநில அரசு மூடி வைத்துள்ளது. ஆனால், இதை நாங்களே திறப்போம் என்று கூறிக்கொண்டு இந்து ஜார்கன் மன்ச் மற்றும் பா.ஜ.கவினர் கூட்டமாகச் சென்று பூட்டை உடைக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடியடிநடத்தி விரட்டியடித்தனர்.
இந் நிலையில் அந்த பிரச்சனைக்குரிய மத வழிபாட்டுத் தலத்தைத் திறக்க வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது. அயோத்தியில் மசூதிஇடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்றும் பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் இன்று நிருபர்களைச் சந்தித்தார். அவர்கூறியதாவது:
ராமர் பிறந்த இடத்தில் கண்டிப்பாக கோவில் கட்டப்படும். நீதிமன்றத் தீர்ப்பு மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதைக்கண்டிப்பாகச் செய்வோம். இதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. மத்தியப் பிரதேசம் தர்ரில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் இந்துக்களும்முஸ்லீம்களும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அதைத் திறக்க வேண்டும்.
அயோத்திப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் 26ம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரமுடிவு செய்துள்ளன. இது தேவையில்லாதது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அயோத்திப் பிரச்சினையைப் பயன்படுத்தப் பார்க்கிறதுகாங்கிரஸ்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் மீண்டும் அங்கு மசூதி கட்டித் தரப்படும் என்றுஉறுதியளித்தார். அந்த விஷயத்தில் இப்போது காங்கிரசின் நிலை என்ன என்பதை சோனியா தெளிவுபடுத்த வேண்டும்.
இறைச்சிக்காக பசுக்களைக் கொல்வதைத் தடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் தனது நிலையை தெளிவாக்க வேண்டும். பசு வதையை மத்தியப்பிரதேசத்தில் உள்ள அக் கட்சியின் அரசு தடை செய்துள்ளது. அதே நேரத்தில் வட-கிழக்கு மாநிலங்களில் பசு வதைத் தடுப்புச் சட்டத்தைகாங்கிரஸ் எதிர்க்கிறது என்றார் நாயுடு.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications