அதிமுகவுக்கு ஆதரவு இல்லாததால் ஜெ. புதிய முடிவு
சாத்தான்குளம்:
தனது பிரச்சாரத்துக்கு மக்களிடையே உரிய ஆதரவு கிடைக்காததால் முதல்வர் ஜெயலலிதாவிடமும் உற்சாகம்குறைந்துவிட்டது. நிலைமை மோசமாக இருப்பதால் மேலும் ஒரு நாள் அங்கு பிரச்சாரம் செய்ய அவர்திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நேற்று 3வது நாளாக பிரச்சாரம் செய்த அவர் எழுதி வைத்ததையே படித்துவிட்டுப் போனார். கருணாநிதியைத்தாக்குவது, காங்கிரஸை விமர்சனம் செய்வது ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு மதமாற்றத் தடைச் சட்டம் ஏன்கொண்டு வரப்பட்டது என்பதை மட்டும் விளக்கிவிட்டு அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்றார்.
இச் சட்டம் கொண்டு வந்ததால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றரீதியில் தான் ஜெயலலிதாவின் பிரச்சாரம்இருந்தது. ஆசை காட்டி மதம் மாற்ற முயல்பவர்களுக்கு எதிராகவே இச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மற்றபடிகிருஸ்துவர்களும், அந்த மதத் தலைவர்களுக்கும் எதிராக இச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்று திரும்பத்திரும்ப ஜெயலலிதா கூறினார்.
இதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு அதையே எல்லா இடங்களிலும் படித்தார். இதனால் ஆரம்பகட்டத்தில் பிரச்சாரத்தில் இருந்த எழுச்சியும் பரபரப்பான பேச்சும் இப்போது இல்லை.
ஜெயலலிதா வரும் இடங்களில் எல்லாம் கூட்டத்தைக் கூட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பு அமைச்சர்கள் தலையில்விழுந்துள்ளது. இதனால் தங்கள் ஊரிலிருந்து அழைத்து வந்துள்ள ஆட்களை ஜெயலலிதா செல்லும் இடங்களுக்குஎல்லாம் கார்கள், வேன்களில் அழைத்துச் சென்று நிறுத்தி கூட்டம் காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் வேன் வரும் பாதையில் மீண்டும் மீண்டும் பார்த்த முகங்களே நிற்கின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்
அந்தந்தப் பகுதி மக்கள் ஜெயலலிதா வரும் இடங்களை தவிர்ப்பதிலேயே தீவிரம் காட்டுகின்றனர். கடந்த 3நாட்களில் சுமார் 125 கி.மீ. தூரம் வரை சாத்தான்குளத்தைச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்துள்ள ஜெயலலிதாவுக்குதொகுதியின் நிலைமை புரிந்துவிட்டதாகவே தெரிகிறது.
இதனால் அவரது முகத்திலும் அமைச்சர்கள் முகத்திலும் புன்னகை மிஸ் ஆகிவிட்டது. அமைச்சர்கள் இருள்அடித்த முகங்களுடன் தான் தொகுதியை சுற்றி வந்து கொண்டுள்ளனர். பெருவாரியாக வசிக்கும் கிருஸ்துவமக்கள் பெரும் அளவில் வந்து ஓட்டு போட்டால் நிலைமை அதோ கதி தான் என்பதை அதிமுக உணர்ந்துள்ளது.
இதனால் தான் குண்டர் படையை நடமாட விட்டு மக்கள் ஓட்டு போடவே வர அச்சப்படும் நிலையை உருவாக்கிஇருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.
ஜெயலலிதாவை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இப் பகுதி கிருஸ்துவ மதத் தலைவர்களின் எதிர் பிரச்சாரம்தான். காஞ்சி சங்கராச்சாரியின் உத்தரவுப்படி மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளாகக் கூறும்இவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்குமக்களிடையே ஆதரவும் கிடைத்துள்ளதை ஜெயலலிதாவுக்கு கிடைக்கும் வரவேற்பு உறுதி செய்கிறது.
முகத்தில் செயற்கை சிரிப்போடு ஓடியாடிக் கொண்டிருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமே.ஜெயலலிதா செல்லும் இடங்களில் எல்லாம் வேனுக்கு முன்னால் ஓடுவதே இவரது வேலை. கடந்த 3 நாட்களில்இவர் ஓடிய ஓட்டம் ஒலிம்பிக் வீரர்களையே வெட்கப்படச் செய்துவிடும் என்பது மட்டும் நிஜம்.
மற்ற அமைச்சர்கள் வீடு, வீடாகப் போய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரத்தை ஒருங்கிணைத்துவருவது தினகரன். அவருக்கு உதவி சசிகலா.
மக்களிடையே ஓரளவுக்கு ஆதரவு இருந்தாலும் பிரச்சாரத்தில் ஈடுபடவும், அதிமுக தொண்டர்களை எதிர்த்துநிற்கவும் திராணியில்லாமல் காங்கிரஸ் பட்டுவரும் பாடும் சொல்லி மாளாது. ஒரு வேளை காங்கிரஸ் வென்றால்அது நிச்சயம் காங்கிரஸ்காரர்களால் கிடைத்த வெற்றியாக இருக்காது.
மக்களே பார்த்து கொடுத்த வெற்றியாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு காங்கிரஸ் தொண்டர்களிடையேஎழுச்சி காணப்படுகிறது. இவர்களுக்கு திட்டம்போட்டுத் தந்து, உத்திகளையும் சொல்லித் தந்து ஊக்கமும் தந்துபிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வரும் வேலையில் திமுக, மதிமுக தொண்டர்கள் தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வரும் 22ம் தேதி வரை சாத்தான்குளத்தில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதாஇப்போது 23ம் தேதியும் அங்கேயே தங்கி பிரச்சாரம் செய்யப் போவதாகக் கூறப்படுகிறது. கடந்த 17ம் தேதிஇங்கு வந்த ஜெயலலிதா ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு 22ம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் இங்கு பிரச்சாரம்செய்யத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்குரியதாகிவிட்டதால் 23ம் தேதியும் சாத்தான்குளத்தில்பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் தானே போட்டியிட்டபோது கூட ஜெயலலிதா இத்தனை நாட்கள் அங்குபிரச்சாரம் செய்யவில்லை. கடந்த மே 31ம் தேதி வாணியம்பாடி, அச்சிறுபாக்கம், சைதாப்பேட்டை ஆகியதொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்துபோது ஒவ்வொரு தொகுதியிலும்3 நாட்கள் தான் பிரச்சாரம் செய்தார்ஜெயலலிதா.
இந் நிலையில் நிலைமை சாதகமாக இல்லை என உளவுப் பிரிவு தகவல் கொடுத்துள்ளதால் சாத்தான்குளத்தில்மேலும் ஒருநாள் தங்கி பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தோல்வி பயம்:
ஜெயலலிதாவுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாலேயே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைஒருநாள் நீட்டித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரானபீட்டர் அல்போன்ஸ் கூறிள்ளார்.
இன்று திருநெல்வேலியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஒரு இடைத் தேர்தலுக்காக மாநில முதல்வர் ஒருவர் 7 நாள் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளது சுதந்திரஇந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும்.
மேலும் அரசு எந்திரம் முழுவதையுமே தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. தமிழக டி.ஜி.பி. இங்கு இருக்கிறார். மேலும் தமிழகத்தின் முக்கியத் துறைகளைச்சேர்ந்த அதிகாரிகளும் சாத்தான்குளத்தில் முகாமிட்டுள்ளனர் என்றார் அல்போன்ஸ்.
பொது விடுமுறை:
இதற்கிடையே இடைத் தேர்தலையொட்டி சாத்தான்குளத்தில் வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று விடுமுறை விடாவிட்டால், சாத்தான்குளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளநிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மீது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications