அயோத்தி: ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகள்- சங்கராச்சாரியார் கோபம்
விஜயவாடா:
வரவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அரசியல்வாதிகள் அயோத்திவிவகாரத்தைக் கிளறுகிறார்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்கோபத்துடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்ற சங்கராச்சாரியார் ஜனாதிபதி டாக்டர் கலாம், பிரதமர் வாஜ்பாய்ஆகியோருடன் அயோத்தி பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலப் பகுதியை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிடம்ஒப்படைக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றையும்மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கியுள்ளன. வரும் 26ம்தேதி அயோத்தி விவகாரம் தொடர்பாக முழு விவாதமும் நடக்க உள்ளது.
இந் நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று நிருபர்களிடம் சங்கராச்சாரியார்கூறுகையில்,
அரசியல்வாதிகள் தலையீடு காரணமாகத்தான் அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகளில் தொடர்ந்துதாமதம் ஏற்பட்டு வருகிறது.
எப்படியாவது ஓட்டுக்களை அள்ளிக் குவித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான்அயோத்தி விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த முறை எப்படியும் அயோத்தி பிரச்சனை சுமூகமாகவும் விரைவிலும் தீர்ந்து விடும்என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நான் இந்த விவகாரத்திலேயேதலையிட்டிருக்கவே மாட்டேன் என்றார் காஞ்சி சங்கராச்சாரியார்.
இதற்கிடையே நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசுதாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாபர் மசூதி கமிட்டிகோரிக்கை விடுத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனால் இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்கும் என்றுதெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications