கேரள போலீஸ் தாக்குதல்: ஈரோட்டில் பந்த்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோடு:
தமிழக விவசாயிகள் மற்றும் நிருபர்கள் மீது கேரள போலீசாரும் ரெளடிகளும் தாக்குதல்நடத்தியதைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்நடத்தப்பட்டது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் முக்காலியில் பவானி அணையின் குறுக்கே அம்மாநில அரசு கட்டிக் கொண்டிருக்கும்அணையைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் தமிழக விவசாயிகளும், நிருபர்களும்சென்றிருந்தனர்.
ஆனால் அங்கிருந்த கேரள மாநில போலீசாரும், ரெளடிகளும் தமிழக விவசாயிகளையும்நிருபர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில் 15 விவசாயிகளும், ஐந்து நிருபர்களும் பலத்தகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்குதல் நடத்திய கேரளப் போலீசாருக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கக் கோரியும் இன்று ஈரோடு மாவட்டத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிலபகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த பந்த்திற்கு அனைத்துக் கட்சிகளும்,விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி சாகர் ஆகிய நகரங்களில் முழுஅளவிலான கடை அடைப்பு நடைபெற்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப்பாதிக்கப்பட்டது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் அனைத்தும்அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் ஓரிரண்டு அரசு பஸ்கள் மட்டுமே ஓடினாலும், அவற்றிலும்மக்கள் கூட்டம் மிகமிகக் குறைவாகவே இருந்தது.
பந்த்தையொட்டி இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நாளை கோயம்புத்தூர் வருவதையொட்டி,அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று நடக்க வேண்டிய பந்த் வேறொரு தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications