குழந்தைகளை பிச்சையெடுக்க தூண்டினால் 2 ஆண்டு சிறை
ஊட்டி:
குழந்தைகளைப் பிச்சையெடுக்கத் தூண்டுபவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கவகை செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறைஇயக்குநரான சுப்ரியா சாஹு கூறினார்.
ஊட்டியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
குழந்தைகள் பிச்சையெடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அவர்களுக்குத் தேவையான உணவு, உடைமற்றும் தங்கும் இடங்களை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. மேலும் அவர்களுக்குத்தேவையான கல்வியையும் அரசு அளித்து வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் தற்போது 25 காப்பகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார்5,500 சிறுவர், சிறுமிகள் உள்ளனர்.
இவ்வாறு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்நிலையில் குழந்தைகள் பிச்சையெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களைப் பிச்சைஎடுக்கும்படி தூண்டுவது சமூக விரோதச் செயலாகும்.
இவ்வாறு குழந்தைகளைப் பிச்சை எடுக்கத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து,அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.
18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் சட்டம் சென்னைமாகாணமாக தமிழகம் இருந்தபோதே கொண்டுவரப்பட்டது. ஆனால் அது அமல்படுத்தப்படாமலேஇருந்து வந்தது.
எனவே தற்போது இந்தச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த தற்போதைய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. வரும் மார்ச் மாதம் இந்தச் சட்டம் முதல் கட்டமாக சென்னையில் அமல்படுத்தப்படும்என்றார் சுப்ரியா சாஹு.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications