திருவள்ளூரில் "கொள்ளைக்கார" என்ஜினியரிங் கல்லூரி: மாணவர்கள் சராமாரி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவள்ளூர் அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில்ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்திடமும், அகில இந்தியத்தொழில்நுட்பக் கழகத்திடமும் அக்கல்லூரி மாணவ, மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தீனதயாள் என்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தக்கல்லூரி நிர்வாகத்தின் போக்கைக் கண்டு மிகவும் கொதிப்படைந்து போயுள்ளனர்.

படிப்பதற்காக வந்துள்ள அவர்களிடமிருந்து எவ்வளவு "கறக்க" முடியுமோ, அவ்வளவையும்"கறந்து" விடுவது என அந்தக் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கல்லூரியில் சேரும் போதே நன்கொடை என்ற பெயரில் குறைந்தது ரூ.50,000லிருந்து லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துகிறது நிர்வாகம். ஆனால் மாணவ, மாணவிகளிடம் அதற்கானஉரிய ரசீதுகளைக் கொடுப்பதில்லை.

மேலும் எடுத்ததற்கெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து கட்டணங்களையும் வசூலித்துவிடுகிறது இந்தக் கல்லூரி. அவர்களை வற்புறுத்தி கல்லூரி விடுதியில் சேரச் சொல்வது, அப்படிச்சேர்ந்த பின்னர் விடுதி உணவகத்தில்தான் (மெஸ்) கட்டாயம் சாப்பிட வேண்டும் எனவற்புறுத்துவது, உள்ளூர் மாணவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் கல்லூரி பஸ்சில்தான்வரவேண்டும் என்று வற்புறுத்துவது என அந்தப் பட்டியல் நீள்கிறது.

இவை ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாகக் கட்டணங்களைத் தீட்டுவதுதான் இந்தக்"கொள்ளைக்கார" கல்லூரியின் "ஸ்பெஷாலிட்டி". உதாரணமாக, கல்லூரி பஸ்சில் வரும்மாணவர்கள் ரூ.10,000 பணத்தைக் கட்டாயம் கட்டியாக வேண்டும். பஸ்சே வேண்டாம் என்றாலும்கல்லூரி நிர்வாகம் விடாது.

மிரட்டி, மிரட்டியே தங்களிடமிருந்து லட்சக் கணக்கில் பணத்தைச் சுரண்டி வருவதைக் கண்டமாணவர்கள் மிகவும் கொதிப்படைந்து சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைச்சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

ஆனால் இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் கல்லூரி மீது எடுக்கப்படாததைத்தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திடம் புகார்கொடுத்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநரான பிரபாகரனை நேரடியாகவே சந்தித்து, அழாதகுறையாகத் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து கொட்டித் தீர்த்து விட்டனர்.

அடுத்த ஆறு நாட்களில் அந்தக் கல்லூரி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தன்னிடம்புகார் தெரிவித்த மாணவ, மாணவிகளிடம் பிரபாகரன் உறுதி அளித்துள்ளார்.

கல்லூரியின் கொடுமைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்தமாகத் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+