கள்ள நோட்டு புழக்கம்: சென்னையில் 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட 4 பேரைப் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சத்திற்கான கள்ள நோட்டுக்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
வடபழனி, தி. நகர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில்இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இது தொடர்பாகப் போலீசார் தனிப்படை அமைத்து கள்ள நோட்டுக்களைப்புழக்கத்தில் விடுபவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர்நடமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பிடித்து போலீசார் சோதனையிட்டபோது, அவர்கள் இருவரிடமும் ரூ.100 மற்றும்ரூ.50க்கான கள்ள நோட்டுக்கள் கத்தை கத்தையாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சங்கர் மற்றும் நாராயணன் ஆகிய அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த கள்ள ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
அந்த இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் தி. நகரில் ஒரு வீட்டைப் போலீசார்சோதனையிட்டதில் அங்கும் ஏராளமான கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.அனைத்தும் ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுக்கள் ஆகும். அந்த வீட்டிலிருந்த இரண்டுபேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நான்கு பேரிடமிருந்தும் நேற்று ரூ.1.70 லட்சம் மதிப்பு கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் இன்று நிருபர்களிடம்தெரிவித்தார்.
மேலும், சென்னையில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுவைத்திருப்பவர்களைக் குறிவைத்து, அவர்களைத் தாக்கி பணம் பறித்து வந்த நிஜாமுதீன் என்பவன்உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாகவும், மேலும் சிலரைத் தேடி வருவதாகவும்விஜயகுமார் கூறினார்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications