திருப்பத்தூர் அருகே பட்டாசுகள் வெடித்து 2 பேர் உடல் சிதறி பலி
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் பட்டாசுகள்வெடித்துச் சிதறியதில் 2 பேர் உடல் கருகி பலியாயினர்.
திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ராவுத்தம்பட்டியில் பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலைவைத்திருந்தார். கல்யாணங்கள், கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு அவர் பட்டாசுகள்தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.
அவரது பட்டாசுத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை பக்கத்தில் உள்ள கிட்டங்கியில்இருப்பு வைத்திருப்பது வழக்கம். அந்த கிட்டங்கியை தண்டபாணி என்பவர் காவல் காத்து வந்தார்.
இந்நிலையில் அங்கு ராஜேஷின் மகன் மகேஷ் நேற்று முன்தினம் இரவு பட்டாசுகளைத் தயாரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டாசுபொட்டலங்களில் தீப்பிடித்து வெடிக்கத் தொடங்கியது. இதையடுத்து கிட்டங்கியும், அருகில் இருந்தபட்டாசுத் தயாரிப்புப் பிரிவும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இந்தப் பயங்கரமான வெடி விபத்தில் தண்டபாணியும் மகேஷும் தீயில் சிக்கி உடல் கருகிபரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்புப் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில்ஈடுபட்டனர். நீண்ட நேரமுயற்சிக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் மகேஷ் மற்றும் தண்டபாணிஆகியோரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டன.
பட்டாசு வெடித்த சப்தம் அப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது போல கேட்டதாக அப்பகுதியில்உள்ளவர்கள் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications