கலாம் வருகை: தமிழகம், புதுவையில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஒரு நாள் பயணமாக இன்று இரவு சென்னை வந்து சேர்கிறார்.நாளை பாண்டிச்சேரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்கிறார்.
இன்று இரவு சென்னை வந்து சேரும் டாக்டர் கலாம், தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில்தங்குகிறார்.
பின்னர் நாளை காலை பாண்டிச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார் டாக்டர் கலாம். அங்குஅரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், பின்னர் அரவிந்த் கண்மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
டாக்டர் கலாமின் வருகையையொட்டி பாண்டிச்சேரி முழுவதும் போலீசார் தீவிரமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநிலக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பாண்டிச்சேரி சாலைப் போக்குவரத்தில் பல மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால்மாணவ, மாணவிகள் சிரமப்பட நேரிடும் என்பதால் நாளை பாண்டிச்சேரி முழுவதும் உள்ள பள்ளிமற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பி மாலை 4 மணிக்கு திருப்பூர் செல்லும் டாக்டர் கலாம்,அங்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.அங்கு வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேருகிறார் டாக்டர் கலாம். அங்கு இந்தியத்தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் கிராமப்புறக் குழந்தைகளுக்கான கண் பராமரிப்புத்திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அவர், அங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுடன்கலந்துரையாடுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு நாளை இரவு சுமார் 8.30 மணிக்கு சிறப்புவிமானத்தின் மூலம் கோயம்புத்தூரிலிருந்து டெல்லிக்கு செல்கிறார் டாக்டர் கலாம்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாககோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா இன்று நிருபர்களிடம் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications