காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள்: கட்சிகளுக்கு காளிமுத்து கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டொழிக்க வேண்டும்என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழக அரசியல் கட்சிகளுக்கிடையே மனமாச்சர்யங்கள், காழ்ப்புணர்ச்சிகள் நிலவுகின்றன. இதைவிட்டொழித்து விட வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த முடியும்.
சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை, சமூக நலன் குறித்த சிந்தனை மட்டுமேஅரசியல் கட்சிகளுக்கு அதிகம் இருக்க வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சியான சமுதாயத்தைக்காண முடியும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications