தலித்துகளை அவமதித்த வழக்கு: சங்கராச்சாரியார் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
தலித் மக்களை அவமதித்துப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் பிரமுகர்தொடர்ந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சின்னக் காஞ்சிபுரம் நகரைச் சேர்ந்த புதிய தமிழகம் செயலாளரான நீலமேகம் என்பவர், தலித்மக்களை அவமதிக்கும் வகையில் சங்கராச்சாரியார் பேசியுள்ளதாகக் கூறி காஞ்சிபுரம் முதலாவதுநீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை எதிர்த்து காஞ்சி சங்கராச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஒரு தமிழ் நாளிதழில் கோவில் வழிபாடு தொடர்பாகநான் கூறிய கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
தலித் என்ற வார்த்தையை விட ஹரிஜன் என்ற பதம் சிறந்தது, உயர்வானது என்றுதான் அதில் நான்கூறியிருந்தேன். யாரையும், எந்தப் பிரிவினரையும் அவமானப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தைகூட நான் கூறவில்லை.
இது இந்தி தண்டனைச் சட்டம் 500வது பிரிவின்படி குற்றச் செயல் அல்ல. ஆனால்துரதிர்ஷ்டவசமாக எனக்கும், மற்றவர்களுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம்சம்மன் அனுப்பியுள்ளது.
இதை ரத்து செய்து வழக்கு விசாரணையையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார்அம்மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்குஇடைக்காலத் தடை விதித்ததோடு, நீலமேகத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டார்.
வரும் 26ம் தேதிக்குள் நோட்டீஸிற்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீலமேகத்திற்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications