150 கி.மீ. தூரம் நடந்த கார் கடத்தல் "கண்ணாமூச்சி"
சென்னை:
கீழக்கரையில் கடத்திச் செல்லப்பட்ட காரை 150 கி.மீ. தூரம் துரத்திப் பிடித்து காரைக் கடத்தியவரைசிவகங்கை மாவட்ட போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னையில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பரமேஸ்வரன் என்பவர் காரை வாடகைக்குஎடுத்தார். உமாநாத் என்ற டிரைவர் பரமேஸ்வரனை காற்றில் ஏற்றிக் கொண்டு சென்றார். காரைராமநாதபுரத்துக்கு விடுமாறு கூறினார் பரமேஸ்வரன்.
வழியில் கீழக்கரையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு உமாநாத் டீ சாப்பிடச் சென்றார்.அப்போது காருக்குள் அமர்ந்திருந்த பரமேஸ்வரன் திடீரென்று அந்தக் காரைக் கடத்திச் சென்றார்.
இதைப் பார்த்து பதறிப் போன உமாநாத், உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல்தரப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
இந்நிலையில் காரைக் கடத்திக் கொண்டு தப்பிய பரமேஸ்வரன் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டஎல்லையை நோக்கி வந்தார். அங்கு தடுப்பு போட்டு போலீஸார் காத்திருந்தனர்.
ஆனால் தடுப்பை உடைத்துக் கொண்டு பரமேஸ்வரன் தப்பினார். போலீஸாரும் உடனே சுதாரித்துக்கொண்டு ஜீப்பில் பரமேஸ்வரனைத் துரத்தினர்.
இந்த துரத்தல் 150 கி.மீ. வரை நீடித்தது. வழியில் பல போலீஸ் தடுப்புக்களையும் பரமேஸ்வரன்உடைத்து எறிந்து கொண்டே சென்றார். ஒரு வழியாக தானிப்பட்டி என்ற இடத்தில் வைத்து காரைமடக்கினர் போலீஸார்.
பின்னர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். காரும் மீட்கப்பட்டது. அவரிடம் போலீஸார்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications