வைகோ கைது விவகாரம்: மத்திய அரசின் மெளனம் குறித்து கருணாநிதி வேதனை
மதுரை:
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கைதுசெய்யப்பட்டது தொடர்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி அதைச் சமர்ப்பித்தபின்னரும் மத்திய அரசு மெளனமாக இருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வேதனைதெரிவித்துள்ளார்.
தான் எழுதிய "தொல்காப்பிய பூங்கா" நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவந்திருந்த கருணாநிதி மதுரை ரயில் நிலையத்தில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் தொடர்ந்து அராஜகத்திலும், அடாவடித்தனத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தின் அலங்கோலத்தை விட இந்த ஒரு மாதசாத்தான்குளத் தேர்தல் அராஜகம் மிகவும் மோசமாகி விட்டது. இதை சாத்தான்குளத் தொகுதிவாக்காளர்களும், தமிழக மக்களும் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிப்பதாக வரும் செய்திகள் தவறானவைஆகும். அங்கு அதிமுகவைத் தோற்கடிப்பதே திமுகவின் முக்கியக் குறிக்கோளாகும்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் பல முறை மத்தியத்தலைமையிடம் கூறியுள்ளனர். ஆனால் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்று கூறிமத்திய அரசு அவர்களைச் சமாளித்து விட்டது.
இருந்தாலும் அதன் பிறகு வைகோ கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை இது தொடர்பாகமத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாகஉள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ தவறாகக் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து ஒரு கோடிகையெழுத்து இயக்கம் நடத்தி, அதன் பிரதிகள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடமும், பிரதமர்வாஜ்பாயிடமும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகும் இவ்விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்துமெளனம் சாதிப்பது சரியல்ல.
இது தொடர்பாக விரைவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைநடத்தி ஒரு முக்கிய முடிவெடுப்போம் என்றார் கருணாநிதி.
தமிழகத்தில் புதிய கூட்டணி எழ வாய்ப்புள்ளதா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "புதியகூட்டணிக்கான நேரம் இன்னும் கனியவில்லை. அதே நேரத்தில் நாங்கள் இப்போதுள்ளகூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமும் வரவில்லை" என்று கருணாநிதிபதிலளித்தார்.
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டும் என்றும்கருணாநிதி தெரிவித்தார்.
"சட்டசபையில் பாதுகாப்பில்லை":
சட்டசபையில் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் கூறியிருப்பதிலிருந்தேஅங்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்பது தெரிய வருகிறது என கருணாநிதி மேலும்தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நான் சட்டசபைக்கு வந்தால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார். அப்படி அவர் கூறியதிலிருந்தே தெரியவில்லையா, சட்டசபையில் எவ்வளவுபாதுகாப்பு உள்ளதென்று?
அந்த அளவுக்கு அங்கு அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதால்தான் நான்சட்டசபைக்கு செல்ல மாட்டேன் என்கிறேன் என்றார் கருணாநிதி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications