பவானி: கேரள அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கேரள மாநிலம் முக்காலியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முடிவை கேரள அரசுகைவிட வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஓ. ராஜகோபால் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
முக்காலியில் தடுப்பணை கட்டுவதை கேரள பா.ஜ.கவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்ததடுப்பணை கட்டுவதை உடனடியாகக் கைவிடுமாறு அவர்கள் கேரள அரசைக் கோரி வருகின்றனர்.
மத்திய அரசு தடை விதித்த பின்னரும் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியைத் தொடருவதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பவானி ஆற்றுப் பிரச்சினை தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் கூடிப் பேசி ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications