ஜெயாவின் 55வது பிறந்தநாள்: அத்வானி வாழ்த்து- அதிமுகவினர் கொண்டாட்டம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய 55வது பிறந்தநாளை இன்று எளிய முறையில்கொண்டாடினார். அவருக்கு துணைப் பிரதமர் அத்வானி, தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
விவசாயிகள் தற்கொலை, வறட்சி ஆகியவற்றால் தனது பிறந்த நாள் விழாவைக் கோலாகலமாகக்கொண்டாடுவதைத் தவிர்குமாறு அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதனால்தனது இல்லத்திலேயே இன்று மிக எளிமையான முறையில் தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடினார் ஜெயலலிதா.
அத்வானி வாழ்த்து:
இன்று காலை ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணைப் பிரதமர்அத்வானி, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருக்கு ஜெயலலிதா நன்றிதெரிவித்துக் கொண்டார்.
ஆளுநர் ராமமோகன் ராவும் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத்தெரிவித்தார். மேலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி உள்ளிட்டோரும்ஜெயலலிதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிறந்தநாளை முன்னிட்டு நேற்றிரவு தான் அவர் சாத்தான்குளத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டுசென்னை திரும்பினார்.
கேக் வெட்டி கொண்டாட்டம்:
இதற்கிடையே ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்அக்கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டனர்.சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சார்பில்கட்சியின் அமைப்புச் செயலாளரான விசாலாட்சி நெடுஞ்செழியன் கேக் வெட்டினார்.
நிதியமைச்சர் பொன்னையன் ஜெ. பிறந்தநாள் விழா மலரை வெளியிட்டார். அதை சட்ட அமைச்சர்ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானதொண்டர்களுக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தனது பிறந்தநாளை பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்று ஜெயலலிதா ஏற்கனவேகேட்டுக் கொண்டிருந்த காரணத்தால் ரத்ததானம், அன்னதானம், இலவச ஆடைகள் வழங்குதல்போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிமுகவினர் கொண்டாடினர்.
பல்வேறு கோவில்களிலும் ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகளையும்அதிமுகவினர் நடத்தினர்.
முன்னதாக இன்று காலை சென்னை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் பொன்னையன் தங்கத்தேர்இழுத்தார். பின்னர் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளையும் அவர் வழங்கினார்.
இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு,,,:
இதற்கிடையே ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசுமருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்க சட்ட அமைச்சர்ஜெயக்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
அது தவிர இலவச சேலை, வேட்டிகளையும் வழங்குகிறார் ஜெயக்குமார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications