அமெரிக்க இரட்டை வேடம்: மலேசியா கடும் தாக்கு
கோலாலம்பூர்:
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாத விஷயத்தில் இரட்டை வேடம் போடுவதாக மலேசியப் பிரதமர்மகாதிர் முகம்மது பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.
கோலம்பூரில் நடந்து வரும் அணி சோரா நாடுகளின் மாநாடு நடந்து வருகிறது. அந்தக் குழுவில் உள்ள 116நாடுகளில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 55 சதவீதத்தினர் வசிக்கின்றனர். ஐ.நா. சபையின் உறுப்புநாடுகளில் மூன்றில் இரு பங்கு இந்த நாடுகள் தான்.
இந்த நாடுகளின் மாநாட்டில் மகாதிர் கூறியதாவது:
அமெரிக்காவை உலக போலீஸ்காரனாக ஏற்கவே முடியாது. ஒரு நாடு உலகத்தையே கட்டுப்படுத்தும்காலமெல்லாம் மலையேறிவிட்டது. இனியும் அமெரிக்காவும் அவர்களது மேற்கத்திய தோழமை நாடுகளும்சேர்ந்து கொண்டு உலகை ஆட்டிப் படைக்க விடக் கூடாது.
உலக நாடுகள் அனைத்துக்கும் அமெரிக்கா விடும் சவால் தான் ஈராக் மீதான போர். இஸ்லாமிய தீவிரவாதம்தோன்றியதற்கே காரணம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தான்.
பாலஸ்தீனர்களை வரையரையே இல்லாமல் கொல்வதும், குழந்தைகளை ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசிக்கொல்வதும், டாங்கிகளை வைத்து வீடுகளைத் தகர்ப்பதும், புளுட்டோனியம் தடவப்பட்ட குண்டுகளைக் கொண்டுபாலஸ்தீனர்களைச் சுடுவதுமான இஸ்ரேல் செய்து வரும் அட்டாகசத்துக்கு உறுதுணையாய் நிற்கும் அமெரிக்காஎப்படி நியாயம் பேச முடியும்?
தங்களது சர்வாதிகாரத்தை பிற நாடுகளுக்கு போர் மூலம் பரவச் செய்யும் அமெரிக்காவையும் அதன் தோழமைநாடுகளையும் ஒதுக்கித் தள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதலைக் காரணமாகவைத்துக் கொண்டு மற்ற நாடுகளை நினைத்தபோதெல்லாம் தாக்குவது, உலக விதிகளை மீறுவது, மனிதஉரிமைகளை நசுக்குவது என அமெரிக்கா செய்து வரும் அநியாயங்களை யார் தடுப்பது?
ஐரோப்பா தான் மற்ற நாடுகளை ஆள வேண்டும் என்ற கிழட்டு சிந்தாந்தத்துக்கு எல்லாம் இனி இடம் கிடையாது.அமெரிக்காவை உலக போலீஸ்காரனாக ஏற்கவும் முடியாது.
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அட்டூழியம் தீவிரவாதம் இல்லையா? அதை தடுக்க வேண்டிய அமெரிக்கா,இஸ்ரேலை ஆதரிப்பது ஏன்? ஈராக் தனது ஆயுதங்களை அழிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால்,அமெரிக்காவின் இரட்டை வேடத்தை யார் களைவது?
பாலஸ்தீனத்துக்கு நேர்ந்து வரும் அநியாயம் காரணமாகத் தான் நியூயார்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமதம் சார்ந்த தாக்குதல் அல்ல. அநியாயத்துக்கு எதிரான தாக்குதல்.
ஈராக்கை அல்-கொய்தாவுடன் இணைத்துப் பேச முடியும் என்றால் இஸ்ரேலின் தீவிரவாதக்குக்குஅமெரிக்காவையும் தொடர்புபடுத்த முடியும்.
இந்த இரட்டை வேடங்கள் ஒழியாத வரை தீவிரவாதமும், தாக்குதல்களும் ஒழியாது என்றார் மகாதிர்.
வெப்சைட்டை துவக்கி வைத்த வாஜ்பாய்:
அணி சேரா நாடுகளுக்கான வர்த்தக வெப்சைட்டை (www.nambisnet.com) பிரதமர் வாஜ்பாய் இன்றுகோலாலம்பூரில் துவக்கி வைத்தார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்த வெப்சைட்டை உருவாக்கியுள்ளது.
இந்த மாநாட்டில் வட கொரியா, ஈராக், சர்வதேச தீவிரவாதம், பாலஸ்தீன விவகாரம் ஆகியவை குறித்து முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இதற்கிடையே அணி சோரா நாடுகள் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்பர்வேஸ் முஷாரப் இன்று கிளப்பினார். இதையடுத்து சர்வதேச தீவிரவாதம் குறித்த விவாதத்தில் பாகிஸ்தானின்தீவிரவாதத்தையும் இந்தியா குறிப்பிடும் என்று தெரிகிறது.
இருவரும் மலேசியாவில் இருந்தாலும் முஷாரபைச் சந்தித்துப் பேசும் திட்டம் ஏதும் தனக்கு இல்லை என வாஜ்பாய்கூறியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications