ஜெவுக்காக சுண்டு விரலை காணிக்கை செய்த தொண்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வேலூர் மாவட்ட அதிமுக பிரமுகர் தன்சுண்டு விரலை வெட்டி ஐயப்பன் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஜடயனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் அந்த ஊரின் அதிமுககிளைச் செயலாளராக உள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சாரதி என்ற மகனும்உள்ளனர்.

விரல் காணிக்கை:

ஜெயலலிதாவின் 55வது பிறந்தநாளான நேற்று காலை 7 மணிக்கு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுசாமி கும்பிட்டார் குணசேகரன். அப்போது ஐயப்பனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடிவு செய்தஅவர் திடீரென்று தன் வலது கையின் சுண்டு விரலை வெட்டி கோவில் உண்டியலில் போட்டுவிட்டார்.

பின்னர் விரலை வெட்டிய கையை ஒரு துணியால் போர்த்திய படி நேரடியாக அரசுமருத்துவமனைக்குச் சென்றார் குணசேகரன்.

அங்கு ஜெயலலிதாவுக்காக தன் விரலைக் காணிக்கை செலுத்திய விவரத்தை டாக்டரிடம் கூறினார்.இதைக் கேட்டதும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

கிணற்றில் கிடந்த விரல்:

அதற்கு முன்பே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தன் மனைவியிடமும் குணசேகரன் இதுபற்றிக் கூறியிருந்தார்.

இதையடுத்து ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் தெய்வசிகாமணி என்பவருக்கு விவரம்தெரிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து கொண்டிருப்பதால் இதை அபசகுணமாகக் கருதியதெய்வசிகாமணி யாருக்கும் தெரியாமல் உண்டியலைத் திறந்து குணசேகரனின் விரலை எடுத்து ஒருசிறிய பிளாஸ்டிக் பையில் சுற்றி அருகில் உள்ள கிணற்றில் வீசி எறிந்து விட்டார். பின்னர் அவரும்மாயமாகி விட்டார்.

இதற்கிடையே போலீசாருக்கும் குணசேகரனின் விரல் காணிக்கை விஷயம் தெரிய வந்தது.அவர்கள் தெய்வசிகாமணியைத் தேடி வந்தபோதுதான் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்பல்லோவில் அனுமதி:

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கும் தகவல் பறந்தது. அவர் உடனே வேலூர் மாவட்ட கலெக்டர்மோகன்தாசைத் தொடர்பு கொண்டார்.

குணசேகரனின் விரலை உடனே சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும்படி கலெக்டருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதற்கிடையே குணசேகரனை சென்னைக்கு வரவழைத்த அமைச்சர் வடிவேலு நேற்று பிற்பகல் 2.30மணிக்கு மேல் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விரல் மீட்பு:

இதற்கிடையே ஜடயனூரில் குணசேகரனின் விரலையும், தெய்வசிகாமணியையும் காணாமல்போலீசார் திணறிக் கொண்டிருந்தனர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் தெய்வசிகாமணிகிடைத்தார். அவரைத் துருவித் துருவி விசாரித்த போதுதான் விரல் கிணற்றில் போடப்பட்ட விவரம்தெரிய வந்தது.

பின்னர் இரவு 7.50 மணிக்கு கிணற்றில் கிடந்த விரல் மீட்கப்பட்டு, இரவோடு இரவாகவே அதுஅப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த விரலை மீண்டும்குணசேகரனின் கையில் பொருத்துவதற்கு டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஜெ. வருத்தம்:

குணசேகரனின் இந்தச் செயலுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் அவர் தெரிவித்துக்கொண்ட ஜெயலலிதா, தன் மீது பற்றுள்ள யாரும் தங்கள் உடலை வருத்தும் செயலில் எப்போதுமேஈடுபடக் கூடாது என்றும் அதிமுக தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

குணசேகரனின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஜெயலலிதாவுக்காக தன்னுடைய நாக்கைவெட்டி திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்தினார். அவரை சென்னைக்கு வரவழைத்தஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+