திருச்சி சிறையில் கைதி மர்ம சாவு: "எய்ட்ஸ்" என்று அதிகாரிகள் மழுப்பல்
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் முறையான சிகிச்சை அளிக்காததால் நேற்று ஒரு கைதி உயிரிழந்தார்.ஆனால் அடுத்தடுத்து 2 கைதிகள் இறந்ததால், அதை மறைப்பதற்காக இந்தக் கைதிக்கு "எய்ட்ஸ்"நோய் என்று கூறி சிறை அதிகாரிகள் மழுப்பியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் கடந்த 1994ம் ஆண்டு தன்மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில்அடைக்கப்பட்டார்.
ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ராஜேந்திரனுக்கு கடந்த ஒரு ஆண்டாக அடிக்கடிகாய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை இருந்து வந்தன. இதையடுத்து கடந்த ஆண்டுசெப்டம்பர் 29ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் சிகிச்சை பிரிவில் அவர்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு டி.பி. நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைக்காக அதேமருத்துவமனையின் எம்.எம்.-2வது வார்டில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் நோயின் பாதிப்பு ராஜேந்திரனுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது.அவருடைய தாய் அம்மாசியை அழைத்து அவரைக் கவனித்துக் கொள்ளுமாறு சிறைப் போலீசார்கூறினர்.
திரவ உணவு வகைகளையே சாப்பிட்டு வந்த ராஜேந்திரன் கடந்த ஐந்து நாட்களாக எதுவுமேசாப்பிடவில்லை. இதையடுத்து அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்துஆலோசித்தனர். ஆனால் தற்குள் நேற்று பகல் 12 மணிக்கு ராஜேந்திரன் இறந்து விட்டார்.
ஆனாலும் அவர் இறந்து போனது அவருடைய அம்மாவுக்குத் தெரியாது. ராஜேந்திரன் தூங்கிக்கொண்டு இருப்பதாகவே அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
சில மணி நேரம் கழித்து ராஜேந்திரன் இறந்தது தொடர்பாக அம்மாசியிடம் போலீசார் விசாரணைநடத்திய பின்னர்தான் அவருக்குத் தன் மகன் இறந்து போயிருப்பதே தெரிய வந்தது. அதன்பின்னரும் நெடு நேரம் ராஜேந்திரனின் உடல் அனாதையாகத்தான் கிடந்தது.
இதற்கிடையே ராஜேந்திரன் "எய்ட்ஸ்" நோய் தாக்கித்தான் இறந்துள்ளதாக டாக்டர்கள் கூறினர்.இந்தத் திடுக்கிடும் தகவல் அம்மாசியை மட்டுமில்லாமல் அனைவரையும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"எய்ட்ஸ்" நோயால் ராஜேந்திரன் தாக்கப்பட்டிருந்தால் கைதிகளுக்காக சென்னையில் இயங்கி வரும்தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்காமல் இவ்வளவு நாட்களும் ஏன் திருச்சியிலேயே வைத்திருந்தீர்கள்என்று கேட்டால் சிறை அதிகாரிகளும் மழுப்புகின்றனர்.
சமீபத்தில் சராய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தஜெயராமன் என்பவர் சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ராஜேந்திரனும் இறந்திருப்பதால், அடுத்தடுத்து இரண்டு சாவுகள் ஏற்பட்டிருப்பதைமறைப்பதற்காகவே அவருக்கு "எய்ட்ஸ்" நோய் என்று கூறி சிறை அதிகாரிகள் மழுப்பியுள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications