செக்ஸ் புகார்: பழனி மகளிர் கல்லூரி முதல்வரிடம் விசாரணை
பழனி:
பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகளை கல்லூரி நிர்வாகமே பாலியல்ரீதியில் தவறாகப்பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரித்து வரும் குழு கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா உள்ளிட்டேரிடமும் விசாரணைநடத்தியது.
கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கு வந்திருந்த குழுவினரை மகிழ்விக்க மாணவிகளைக்கட்டாயப்படுத்தி செக்ஸில் ஈடுபடுத்தியதாக கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவிகளே புகார் கூறியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நியாயம் கிடைக்காதவரை கல்லூக்குப் போக மாட்டோம் என்றும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக பிற கல்லூரி மாணவர்களும் போராட்த்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி (டி.ஆர்.ஓ.) தலைமையில் விசாரணைக் குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர்அமைத்துள்ளார். இதில் மருத்துவத்துறையின் பெண் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக் குழுவினர் இரு நாட்களாக் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி முதல்வர் சந்திரகாந்தா, கல்லூரிப் பேராசியைகள்,ஊழியர்கள் மற்றும் மாணவிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
விசாரணை நடந்த டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான மாணவிகளும், இந்தியமாணவர் சங்கப் பிரதிநிதிகளும், பெற்றோர்களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குழுமியிருந்தனர்.
கிட்டத்தட்ட 35 மாணவிகளும், 6 பெற்றோர்களும் அதிகாரிகளிடம் சாட்சியமளித்தனர்.
பின்னர் இந்தக் குழுவினர் கல்லூரி முதல்வரின் அறை, மாணவிகள் விடுதியையும் பார்வையிட்டனர். எந்த மாணவியின் பெயரையும்வெளியிட மாட்டோம் என்று கூறி இந்த விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் சந்திரகாந்தா மதுரை மாநகர மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரகாந்தா இதற்கு முன் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வராக இருந்தபோதும் இதே போன்ற ஒரு பிரச்சினையில்சிக்கினார் என்பது நினைவுகூறத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications