ரன்வேயில் கழன்ற ஏர் இந்தியா விமான என்ஜின் பாகம்
மும்பை:
மும்பையில் இருந்து ஜெட்டாவுக்குச் சென்ற விமான என்ஜினின் மூடிப் பாகம் கழன்று ரன்வேயில் விழுந்தது. இதையடுத்து அந்த விமானம்மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது.
ஜெட்டாவில் இருந்து ஹஜ் புனித யாத்ரீகர்களை அழைத்து வருவதற்காக ஏர்- இந்தியாவின் போயிங் விமானம் நேற்றிரவு 11 மணிக்குசவுதி புறப்பட்டது. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமானிகள் உள்பட 16சிப்பந்திகள் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற ரன்வேயில், சிறிது நேரத்தில் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது ரன்வேயில்மிகப் பெரிய இரும்புத் துண்டு கிடப்பதைக் கண்டார் ஏர் பிரான்ஸ் விமானி.
இது குறித்து உடனே தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தகவல் தந்தார். உடனே ரன்வேக்கு விரைந்த அதிகாரிகள் அங்கு போயிங்விமான என்ஜினின் மேல் மூடிப் பகுதி கிடப்பதைக் கண்டனர்.
இதையடுத்து முன்பு சென்ற விமானத்தில் இருந்து தான் அது விழுந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்தனர். உடனே அந்த விமானத்தைமும்பை திரும்புமாறு உத்தரவிட்டனர்.
கிட்டத்தட்ட சவுதியை நெருங்கிவிட்ட அந்த விமானம் உடனே இந்தியா திரும்பியது. அதிகாலை 3 மணிக்கு எமர்ஜென்சி சூழலில் அந்தவிமானம் தரையிறங்கியது.
விமானத்தைச் சோதனையிட்டபோது அதன் எரிபொருள் டாங்கிலும் சேதம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் எரிபொருள் கொண்டுசெல்லும் குழாய்களில் வெடிப்புகளும் ஏற்பட்டிருந்தன. ரன்வேயில் அந்த விமான என்ஜினின் மேல்பகுதி மூடி கழன்றதில் ஏற்பட்டஅதிர்வில் தான் இந்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக வேறொரு விமானம் ஜெட்டா அனுப்பப்படுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications