மதுரை கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை:
மதுரையில் உள்ள சில கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மதுரை அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மருத்துவமனையே அல்லோலப்பட்டது. இதனால்நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இந் நிலையில் கல்லூரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கல்லூரியின் முதல்வருக்கு ஒருகடிதம் வந்தது.
அதில் விரைவில் கல்லூரிக்குள் குண்டு வெடிக்கும். அந்த டைம் பாம் கல்லூரியில் வைக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டிருந்தது.
இதே போன்ற ஒரு கடிதம் மதுரைக் கல்லூர முதல்வருக்கும் வந்தது. கல்லூரியில் சில வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும்எந்த நேரத்திலும் அவை வெடிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இரு கல்லூரி முதல்வர்களும் போலீசாருக்குத் தகவல் தந்தனர். மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீசார்இரண்டு கல்லூகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.
இச் சோதனைகளையடுத்து மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் இரு கல்லூரிகளிலும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தீவிர சோதனை நடத்தியும் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் போலீசார் நிம்மத் பெருமூச்சு விட்டனர்.
மாணவர்களில் யாரோ தான இந்த புரளியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
விசாரணை நடந்து வருகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications