கோபால் எங்கே?: மூத்த பத்திரிக்கையாளருக்கு போலீஸ் தொல்லை
சென்னை:
நக்கீரன் பத்திரிக்கை ஆசியர் கோபால் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நக்கீரன் தொடங்கப்பட்ட நாள் முதலே அந்தப் பத்திரிக்கையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.
கோபாலுக்கு நெருக்கமான நண்பர். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளரான சின்னக்குத்தூசி என்ற ஆர்.தியாகராஜன் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு மாதிரியாகவும்இருந்து வருபவர். திருவல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியுள்ள மிக எளிமையான நபர்.
நேற்று இவரது அறைக்குச் சென்ற போலீஸார் திடீரென்று அவரிடம் கேள்விகள் கேட்டு குடைந்தனர்.
கோபாலின் இருப்பிடம் குறித்து அறிவதற்காக வந்ததாகக் கூறிய போலீசார் அவரது அறையைக் குடைய முயன்றனர். ஆனால், நான் ஒருபத்திரிக்கையாளன், ஆயிரம் பத்திரிகைக்கு எழுதுவேன். அதற்காக அதன் எடிட்டர் எங்கு இருக்கிறார் என்று நான் தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவசியமோ, தேவையோ எனக்கு இல்லை என்று சூடாக பதில் தந்தார்.
இதையடுத்து போலீசார் இடத்தைக் காலி செய்தனர்.
அதிரடிப்படையின் உளவாளியான பக்தவச்சலம் என்ற மாணவர் தன்னை பி.பி.சி. நிருபர் என்று கூறிக் கொண்டு காட்டுக்குள் போக,அவரை வீரப்பன் அடையாளம் கண்டு கொண்டு கொன்றுவிட்டார்.
இந்தக் கொலை வழக்கில் கோபாலையும் சேர்த்து உள்ளே தள்ள போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications