இளங்கோவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பஸ் நிலையம் அருகே அதிமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின்செயல் தலைவர் இளங்கோவன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் காங்கிரஸ் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். படப் பாடலை ஒலிபரப்பியது தொடர்பாகஅதிமுகவினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே நேரடியாக காங்கிரஸ் தொண்டர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
இந்த மோதலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனின் கார் டிரைவர் கை உடைக்கப்பட்டது. தன்னைையும் டிரைவரையும் அமைச்சரேஉருட்டுக் கட்டையால் தாக்கியதாக மகேந்திரன் புகார் கூறினார். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
இதனால் அதிமுகவுக்கு எதிராக பொது மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து தங்களை காங்கிரஸார் தான் தாக்கியதாகவும் அதில் சட்டசபைத் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், அதிமுக எம்.பி.சரோஜாவும் காயமடைந்ததாக அதிமுகவினரும் புகார் கொடுத்தனர். தாக்குதல் நடந்தபோது தான் அந்த இடத்திலேயே இல்லை எனஅனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
காங்கிரஸார் கொடுத்த வழக்கைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல அதிகவினர் கொடுத்த புகான்பேரில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளங்கோவனைக் குறி வைத்தே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சாத்தான்குளம் மக்களிடையே நல்ல பெயர்எடுக்கவே அமைச்சர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்கில் இளங்கோவன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
-->












Click it and Unblock the Notifications