For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் விவகாரம்: மகளிர் ஆணையத்திடம் பழனி கல்லூரி மாணவிகள் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர தரம் வேண்டும் என்பதற்காக தர நிர்ணய கமிட்டி உறுப்பினர்களுடன்செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில மாணவிகளை எங்கள் முதல்வரே அவர்களிடம்அனுப்பி வைத்தார் என்று பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் தமிழக மகளிர் ஆணையத்திடம்புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த செக்ஸ் புகார் வெளியானதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிமாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் பொங்கி எழுந்துள்ளனர். பல்வேறுபோராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரியில்கடந்த இரண்டு நாட்களாக மாணவிகளிடமும், பேராசிரியைகளிடமும், அக்கல்லூரி முதல்வர்சந்திரகாந்தாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வரும் 3ம் தேதி திண்டுக்கல் மாவட்டகலெக்டரிடம் இது தொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ. தாக்கல் செய்வார்.

இந்நிலையில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஜெயப்பிரியா, பாரதி, அருள்மொழி, கீர்த்தனாஉள்ளிட்ட மாணவிகள் சென்னை வந்தனர். அங்கு தமிழக மகளிர் ஆணையத் தலைவி வாசந்திதேவியைச் சந்தித்து இந்த செக்ஸ் புகார் தொடர்பான ஒரு மனுவைக் கொடுத்துள்ளனர்.அம்மனுவில்,

எங்கள் கல்லூரியிலும் விடுதியிலும் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. நல்ல உணவு கிடைக்காது.குடிநீர் கிடைக்காது. குளியலுக்குப் பயன்படுத்தப்படும் நீரைத்தான் குடிக்கவும் வேண்டும். சுடுநீர்கூடக் கிடைக்காது.

உடல்நிலை சரியில்லாத மாணவிகளுக்குக் கூட உரிய சிகிச்சையோ, நல்ல உணவோஅளிப்பதில்லை.

ஆனால் ஐந்து நட்சத்திரத் தரம் பெற வேண்டும் என்பதற்காக இது தொடர்பாக ஆய்வு செய்ய வந்த"நாக்" குழு உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த எங்கள் கல்லூரி முதல்வர் பல யுக்திகளைக்கையாண்டார்.

அவர்களிடம் மாணவிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் அந்தக்குழுவினர் இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தவறான முறைகளையும் முதல்வர்பயன்படுத்தினார்.

அதன்படிதான் அந்த "நாக்" குழுவினருடன் உல்லாசமாக இருப்பதற்காக சில மாணவிகளைமுதல்வரே "அனுப்பி" வைத்தார். அவ்வாறு "அனுப்பப்பட்ட" மாணவிகளிடம் சில நாட்களாகபணப்புழக்கம் மிகுந்து காணப்பட்டது. அவர்கள் கல்லூரிக்கு வராத நாட்களிலும் அவர்கள் வந்ததுபோலவே காட்டப்பட்டது. இதே போல் அந்த மாணவிகளுக்கு வேறு பல சலுகைகளும்அறிக்கப்பட்டன.

இந்நிலையில்தான் ஒரு மாணவி சமீபத்தில் தன்னுடைய மாதவிலக்கு தள்ளிப் போனது பற்றி மிகவும்கவலைப்பட்டாள். பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்றவள் திரும்பவே இல்லை.

இது தொடர்பாக கடந்த ஜனவரி 31ம் தேதி அந்த மாணவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதுதான் அவள் கருவுற்றிருப்பதாகவும், அவளுடைய பெற்றோர் அவளைக்கல்லூரிக்கு அனுப்ப மறுக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் "நாக்" குழுவைச் சேர்ந்தவர்கள்தான்அவளுடைய கற்பை சூறையாடியுள்ளனர். இதையும் அந்த மாணவியே தெரிவித்தாள்.

இதைக் கேட்டு கொதிப்படைந்த நாங்கள் பிப்ரவரி 3ம் தேதி கல்லூரி முதல்வரிடம் சென்று நியாயம்கேட்டோம். ஆனால் அவரோ, பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம் என்றும்,கல்லூரியிலேயே வேலை போட்டுத் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறினார்.

ஆனால் நாங்கள் மசியவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்று போராடினோம்.தட்டிக் கேட்டுப் போராடிய எங்களில் ஒருத்தியான ஜெயப்பிரியா என்ற மாணவிக்கு பைத்தியம்பிடித்து விட்டதாகக் கூறி கல்லூரியைவிட்டு நீக்கியுள்ளார் முதல்வர்.

ஜெயப்பிரியாவின் பெற்றோரை வரவழைத்து அவளை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்றும் கூறி விட்டார். அவளுக்குப் பைத்தியம் பிடித்துள்ளதாக கல்லூரியிலும்வதந்தியைப் பரப்பி விட்டார்.

கல்லூரி நிர்வாகத்தின் போக்கைத் தட்டிக் கேட்டதால் ஜெயப்பிரியாவைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதையடுத்துதான் நாங்கள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் குதித்தோம்.இது தொடர்பான விசாரணையை நியாயமாகவும் விரைவாகவும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவைப் பெற்றுக் கொண்ட வாசந்தி தேவி இது தொடர்பாக அரசுக்குத் தகவல்தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் சந்திரகாந்தாவை டிஸ்மிஸ் செய்யும் வரை தொடர்ந்து போராட்டம்நடத்தப் போவதாக மாணவிகள் அறிவித்துள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X