சென்னை மாநகராட்சி: "கராத்தே"யை அவமதித்து பேசிய திமுக உறுப்பினர் வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜனைத் தரக் குறைவாகப்பேசியதாக திமுக கவுன்சிலர் ஒருவர் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். இதனால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் வழக்கமான கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தின்போதுகுடிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடந்தது. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சரியானநடவடிக்கைகள் எடுக்கப்படாததால்தான் தற்போது சென்னையில் குடிநீர்ப் பிரச்சனை எழுந்துள்ளதுஎன்று தியாகராஜன் பேசினார்.
உடனே திமுக உறுப்பினரான கிரிராஜன் குறுக்கிட்டுப் பேசுகையில், இப்படியெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல் பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிரிராஜன் அதோடு நிற்காமல்கராத்தே தியாகராஜன் மேயர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும், ஸ்டாலின் அமர்ந்திருந்த மேயர்இருக்கையில் உட்கார அவருக்குத் தகுதியில்லை என்றும் பேசினார்.
இதையும் அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதையடுத்து திமுகஉறுப்பினர்களும் பதிலுக்குக் குரல் எழுப்பவே இரு தரப்பினரும் மாறி மாறிக் கடுமையாகத் திட்டிக்கொண்டனர்.
அப்போது கராத்தே தியாகராஜனை கிரிராஜன் மிகவும் தரக் குறைவான சொற்களால் திட்டினார்.இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகவும் கொந்தளித்துப் போய் திமுகவினர் மீது பாய முயற்சித்தனர்.இதையடுத்து அவையில் மேலும் கூச்சல், குழப்பம் எழுந்தது.
கிரிராஜனை உடனே அவையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள்கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தியாகராஜன், அவைக் காவலர்களை அழைத்துகிரிராஜனை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அவைக் காவலர்களும் விரைந்து வந்து கிரிராஜனை வலுக்கட்டாயமாக அவையை விட்டுவெளியேற்றினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications