45 பேர் பார்வையை பறித்த அரசு டாக்டரின் பொறுப்புகள் பறிப்பு
பெரியகுளம்:
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 45 பேருக்குபார்வை பாதிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த கண் டாக்டர்கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பொறுப்புகளும் தற்காலிகமாகப்பறிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் இந்த அரசு மருத்துவமனையில் 45 நோயாளிகளுக்கு கண் புரைக்கான அறுவைச் சிகிச்சைநடந்தது. பெரியகுளம் அரசு மருத்துவமனையின் கண் டாக்டர் ஷேக் மஸ்தான் இந்த அறுவைச்சிகிச்சைகளை நடத்தினார்.
ஆனால் சிகிச்சைக்கு மறுநாளே 45 பேருக்கும் கண்ணில் பிரச்சினை ஏற்பட்டது. தங்களால் எதையும்பார்க்க முடியவில்லை என்றும் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அந்த நோயாளிகள்துடித்தனர்.
இதைத் தொடர்ந்து 45 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 18 பேர் குணமடைந்து சமீபத்தில்தான்திரும்பினர்.
மற்றவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் நவீன சிகிச்சைக்காக அவர்கள்மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்குக் காரணமான டாக்டர் ஷேக் மஸ்தானின் பொறுப்புகள்அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. அவருக்கு எந்தப் பணியும் கொடுக்கப்படாமல் கட்டாயக்காத்திருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை அரசு மருத்துவமனையில் எந்தப் பணிகளையும் அவர் மேற்கொள்ளக்கூடாது என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஷேக் மஸ்தான் மட்டுமே கண் டாக்டர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தற்போது அவரது பணியும் பறிக்கப்பட்டுள்ளதால் கண் நோயாளிகளுக்குசிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications