நான் ராஜினாமா செய்யவில்லை: தலைமைச் செயலாளர் மறுப்பு
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளரான லட்சுமி பிரானேஷ் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக திடீரெனதகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதனை லட்சுமி பிரானேஷ் மறுத்துள்ளார். தனக்கும் அரசுக்கும் அவதூறுஏற்படுத்தும் விதத்தில் இந்தச் செய்து பரப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறி முதல்வர்ஜெயலலிதா வாக்குறுதிகளை அளித்ததாக எதிர்க் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தன.
இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல்கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதற்குப் பதில் கடிதம் அனுப்பிய லட்சுமி பிரானேஷ், "முதல்வர்எந்தவிதமான வாக்குறுதியையும் அளிக்கவில்லை. பரிசீலிப்பதாக மட்டுமே கூறியுள்ளார்" என்றுகுறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்தப் பதிலில் திருப்தி அடையாத தேர்தல் கமிஷன் தமிழக அரசுக்கு (முதல்வருக்கும்லட்சுமி பிரனேசுக்கும்) கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் கமிஷனின் கண்டனத்தால் லட்சுமிபிரானேஷ் மிகவும் வருத்தம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சரியான வகையில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்படவில்லை என்று லட்சுமி பிரானேஷ் மீது ஜெயலலிதாஅதிருப்தியுடன் இருப்பதாகவும் இது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் தனது பதவியை லட்சுமிபிரானேஷ் ராஜினாமா செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதனால் தான் டெல்லியில் திட்டக் குழுக் கூட்டத்தில் லட்சுமி பிரானேஷ் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் எனவும்கூறப்பட்டது.
அவருக்குப் பதிலாக தற்போது மத்திய அரசுப் பணியில் உள்ள டாக்டர் நாராயணன் தலைமைச்செயலாளரான நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் கிளம்பின. இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
ஆனால், இந்தச் செய்தியை லட்சுமி பிரானேஷ் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
டெல்லியில் நடைபெற்ற திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை நானும்செல்லவிருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் எனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விமான நிலையம்வரை சென்ற நான் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்.
திட்டக் குழுத் துணைத் தலைவர் கே.சி.பந்துக்கு போன் செய்து நான் வரவில்லை என்பதையும் தெரிவித்தேன்.
உண்மை நிலை இப்படியிருக்க நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், அதனால் தான் டெல்லிபோகவில்லை என்றும் தவறான செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற செய்திகளால் அரசுக்கும், எனக்கும்கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர்முயன்றுள்ளனர். இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அவர்கூறியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை மூன்று முறைதலைமைச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications