""பண பலம் வென்றது; மக்கள் தோற்று விட்டனர்"": இளங்கோவன்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவினர் பணத்தை வாரி இறைத்துதான் வெற்றிபெற்றுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாத்தான்குளம் தேர்தலில் அதிமுகவினரின் பண பலமும், கயமைத் தனமும், அதிகாரத்துஷ்பிரயோகமும்தான் வெற்றி பெற்று கொக்கரிக்கின்றன. ஆனால் இதில் மக்கள் தோற்றுப் போய்நிற்கிறார்கள்.
இந்த முடிவைப் பார்த்து நீதியும் நேர்மையும் தலைகுனிந்து நிற்கின்றன. "தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்" என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
சாத்தான்குளத்தில் அதிமுக பெற்றுள்ள வெற்றி உண்மையான வெற்றியே அல்ல. இந்தத் தீயஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியைமுடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் காங்கிரஸ் ஈடுபடும்.
அதிமுகவினரின் பணபலத்திற்கு மயங்காமல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட்டவாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அனைவருக்கும்நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்கள்பணியாற்றி வரும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் இளங்கோவன்.
வெறிச்சோடிய சத்தியமூர்த்தி பவன்:
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகமானசத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடிக் காணப்பட்டது.
காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட அங்கு காணப்படவில்லை. நிருபர்கள் அங்கு சென்றபோதுஅவர்களை வரவேற்கக் கூட ஒருவரும் இல்லை.
மயான அமைதியுடன் உறைந்து போயிருந்தது சத்தியமூர்த்தி பவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications