ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க. படுதோல்வி
டெல்லி:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தேர்தலையொட்டி அயோத்தி பிரச்சனையைக் கையில்எடுத்த பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம், நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியநான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அங்குவாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. ஆனால 65 தொகுதிகளில் மட்டுமேதேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாகஉருவெடுத்துள்ளது.
பா.ஜ.கவுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அயோத்தி விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இம்மாநிலத்தில் பா.ஜ.க. தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா:
மேகாலயா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்துள்ளன. முடிவுகள்வெளியான 45 இடங்களில் 16 இடங்கள் காங்கிரசுக்குக் கிடைத்துள்ளன.
அவற்றின் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
எதிர்க் கட்சியான பா.ஜ.கவுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இங்கு மொத்தம் 60தொகுதிகள் உள்ளன.
திரிபுராவில்...
திரிபுராவில் இடதுசாரிக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இந்தக்கூட்டணிதான் ஆட்சி அமைக்கவுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 53 முடிவுகளின்படிபார்க்கும்போது இடதுசாரிக் கூட்டணி 35 இடங்களைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 32 தொகுதிகளை வென்றுள்ளது.
நாகலாந்தில்...
நாகலாந்தில் தொங்கு சட்டசபை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 55 இடங்களில் மட்டும் தேர்தல் நடந்தது. இதுவரை 35தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும், நாகலாந்து மக்கள் முன்னணி கட்சிக்கு 13 இடங்களும்கிடைத்துள்ளன. பா.ஜ.க. 3 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications