""செல்லக்குட்டி சாத்தான்குளம் விரைவில் தேவன்குளமாகும்"": ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளத்தில் எதிர்க் கட்சிகளின் ஒட்டு மொத்தப் பிரசாரத்தையும் மீறி அதிமுகவுக்கு வெற்றிதேடித் தந்துள்ள சாத்தான்குளம் தொகுதி வாக்காளர்களுக்கு இதய பூர்வமான நன்றிகளைத்தெரிவிப்பதாக முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதாவிடுத்துள்ள அறிக்கையில்,

சாத்தான்குளம் வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு எனதுஇதயபூர்வமான நன்றிகள்.

என் மீதும், அரசு மீதும் நம்பிக்கை வைத்துள்ள சாத்தான்குளம் தொகுதி மக்களின்நம்பிக்கைக்கேற்றவாறு அதிமுக அரசு செயல்படும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழிக்கேற்ற விரைவிலேயேசாத்தான்குளத்தை தேவன்குளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக வெற்றி பெறாது, படுதோல்வி அடையும் என்று எதிர்க் கட்சித் தலைவர்களும்,பத்திரிக்கைகளும் கூறி வந்தன. அதற்கு மாறாக அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம்இவர்களுக்கு சாத்தான்குளம் வாக்காளர்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

மக்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். அரசியல் கட்சித் தலைவர்களையோ அல்லது அவர்களின்கூட்டணியையோ நம்பியோ நான் இல்லை என்பதை சாத்தான்குளம் மக்கள் மீண்டும் ஒருமுறைநிரூபித்துள்ளார்கள்.

அதிமுகவை விட்டு விலகிய கட்சிகளால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. விலகிச் சென்றகட்சிகளுக்குத்தான் இழப்பு என்பதை சாத்தான்குளம் இடைத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.

திமுகவின் மறைமுக ஆதரவின் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளருக்கு இவ்வளவு ஓட்டுக்கள்கிடைத்துள்ளன. இல்லையென்றால் டெபாசிட் கூட மிஞ்சியிருக்காது.

காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டால் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாது என்ற காங்கிரஸ்கட்சியினரின் மாயையும் இந்தத் தேர்தல் முடிவு மூலம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் 136வது அதிமுக தொகுதியாக சேர்ந்துள்ள சாத்தான்குளம் தொகுதி எப்போதும் எனதுசெல்லக்குட்டியாகவே இருக்கும் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

உற்சாகத்தில் போயஸ் தோட்டம்:

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே சென்னையில் உள்ள அதிமுகதலைமை அலுவலகத்தில் உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அலுவலகத்தின் முன் பட்டாசுகளைக் கொளுத்திவெற்றியைக் கொண்டாடினர்.

தெருவில் போவோர், வருவோருக்கெல்லாம் இனிப்புகளையும் வழங்கிய அதிமுக தொண்டர்கள்,"புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என்று கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர்.

அதேபோல போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டு முன்பாகவும் தொண்டர்கள்குவிந்து பட்டாசுகளை வெடித்து சாத்தான்குளம் வெற்றியைக் கொண்டாடினர்.

கூட்டணி கட்சிகள் வாழ்த்து:

இதற்கிடையே அதிமுக ஆட்சியை மக்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள் என்பதையேசாத்தான்குளம் தேர்தல் முடிவு காட்டுவதாக அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூறியுள்ளனர்.

சாத்தான்குளம் தொகுதி வெற்றி தொடர்பாக சமூக நீதிப் பேரவைக் கட்சியின் பொதுச் செயலாளர்ஜெகவீர பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,

அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து நின்றாலும் அதிமுகவையும், ஜெயலலிதாவையும்வீழ்த்த முடியாது என்பதையே இந்தத் தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியுள்ளது.

மக்கள் முழு மனதுடன் அதிமுக ஆட்சியை ஆதரிக்கிறார்கள் என்பது மறுபடியும்நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெகவீர பாண்டியன்.

இதேபோல பார்வர்ட் பிளாக், தமிழ் மாநில முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சித்தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+