இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப மதுரை தியேட்டர்களில் தடை
மதுரை:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரடிஒளிபரப்பு செய்ய மதுரை தியேட்டர்களில் திடீர் தடை விதிக்கப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்தே பல சினிமா தியேட்டர்களில்அவை நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தன.
அதன்படி மதுரையில் ராம் விக்டோரியா, ஜீவா, கணேஷ் உள்ளிட்ட தியேட்டர்களில் இந்தியாபங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி வந்தன. நேற்றும் இந்திய-பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப இந்தத் தியேட்டர்கள் ஏற்பாடுசெய்திருந்தன.
ஆனால் பொது இடங்களில் இதுபோன்ற போட்டிகளை ஒளிபரப்புவதால், முக்கியமாகஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை ஒளிபரப்புவதால் சட்டம்-ஒழுங்குப்பிரச்சனை ஏற்படலாம் என்று போலீசார் கருதினர்.
இதையடுத்து இந்தத் தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப போலீசார் தடைவிதித்தனர்.
அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கடைகள், டீ கடைகள், டி.வி. விற்கும் கடைகள்ஆகியவற்றில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப போலீசார் தடை விதித்தனர்.
இதற்கிடையே சென்னையில் சாத்தான்குள இடைத் தேர்தல் முடிவை விட நேற்று இந்திய கிரிக்கெட்அணி பெற்ற வெற்றிதான் பெரிதும் பேசப்பட்டது.
சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றி பெற்ற செய்தியை இந்திய வெற்றி மூழ்கடித்து விட்டது.
சென்னையில் மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல பொது இடங்களில் இந்தக் கிரிக்கெட் போட்டிஒளிபரப்பப் பட்டது. இதனால் இரவு 10 மணி வரை இந்தப் பகுதிகள் முழுவதுமே விழாக் காலம்பூண்டிருந்தன.
இந்திய அணி வெற்றி பெற்றதும் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications