வாஜ்பாய், அத்வானிக்கு லஷ்கர்-ஏ-தொய்பா கொலை மிரட்டல்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்வதற்காகஏராளமான தீவிரவாதிகளை லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கம் இந்தியாவுக்குஅனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் வெளியாகும் "தி ப்ரைடே டைம்ஸ்" என்ற பத்திரிக்கையில் இந்தத் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஷ்கர் அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத் பேசியுள்ள ஒரு கேசட்டில் அவன்இது தொடர்பாகக் கூறியுள்ளான். அந்தக் கேசட்டில்,
ஏராளமான தற்கொலைப் படை தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பியுள்ளோம். வாஜ்பாய்உள்ளிட்ட ஏராளமான தலைவர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள்.
அத்வானியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அவரையும் தற்கொலைப் படை மூலம்பயங்கரமாகத் தாக்குவோம்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். ஜிகாதிஇயக்கங்களை ஒடுக்க அவர் முயற்சிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சயீத் அந்தக்கேசட்டில் கூறியுள்ளான்.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரான நான்ஸி பாவல்லுக்கும் அவன் மிரட்டல்விடுத்துள்ளான்.
இதையடுத்து வாஜ்பாய், அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலதலைவர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும், வி.ஐ.பிக்களுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். அதேபோல் காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைகண்காணிக்க ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முஷாரப்புக்கு இந்தியா சூடு:
இதற்கிடையே இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு முஷாரப் அளித்த பேட்டியில்,
பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்கில் எழுப்பத்தான்செய்வார்கள். காஷ்மீர் விடுதலைக்காகத்தான் பாகிஸ்தான் போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு இன்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளரான நாவ்தேஜ் சர்னா இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில்,
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையே கிடையாது என்றுபலமுறை கூறியுள்ளோம். மேலும் 20 பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் அதுமறுத்து வருகிறது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம்கராச்சியில்தான் உள்ளான். அவனையும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முஷாரப் இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பதுகண்டிக்கத்தக்கது என்றார் சர்னா.
இதற்கிடையே முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்கஇந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications