இன்று பங்காரு அடிகளார் பிறந்த நாள்: மேல்மருவத்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
மேல்மருவத்தூர்:
மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களின் 63வது பிறந்த நாள் இன்றுகொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்து மேல்மருத்துவத்தூரில் குவிந்த வண்ணம்உள்ளனர். தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றங்களில் அவரது பிறந்தநாளையொட்டி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனது அவதார தினத்தையொட்டி பங்காரு அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சூரியனில் இருந்து வெளிச்சத்தை எடுத்துக் கொள்கிறோம். பூமியில் இருந்து தங்கம், வைரத்தை எடுத்து நகைசெய்து போட்டு அழகு பார்க்கிறோம். காற்றில் இருந்து ஒலி எடுத்து இசை இசைக்கிறோம். கடலில் இருந்து உப்புஎடுக்கிறோம். இயற்கையில் இருந்து இவ்வளவையும் எடுக்கத் தெரிந்த நமக்கு நம்மிடம் இருந்து என்ன எடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.
பிறவிகள் மாறி மாறி வந்தாலும் வாழ்க்கை ஒன்று தான். அடிப்படை மனித வாழ்க்கையில் மனிதன்ஐம்புலன்களையும் அடக்கி இயற்கையை வணங்கி, தெய்வத்தைத் தொழுதால் அழிந்தும் அழியாத வாழும் நிலைபெறலாம் என்று கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications