பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு: மாணவர்களை குழப்பும் அண்ணா பல்கலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் விவசாயக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க இன்று காலைஅண்ணா பல்கலைக்கழத்திற்க சென்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பெரும் குழப்பம்அடைந்தனர்.

பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களின்வினியோகமும் இன்று தொடங்கியது.

விண்ணப்பங்களை வாங்குவதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றுகாலையிலிருந்தே மாணவ, மாணவிகள், பெற்றோர் நூற்றுக்கணக்கில் குவிய ஆரம்பித்தனர்.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்ப படிவங்கள் எதையும் கொடுக்கவில்லை. இதனால்அவற்றை வாங்க வந்தவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது விண்ணப்பங்கள் ஏதும் இன்று வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால், மார்ச் 3ம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற விளம்பரங்கள்வந்தததையும், பத்திரிக்கை, டிவிக்களில் செய்திகள் வந்தததையும் பெற்றோரும் மாணவர்களும்சுட்டிக் காட்டினர்.

அப்போது இன்டர்நெட்டில் தான் விண்ணப்பப் படிவங்கள் உள்ளன. அதைத் தான் மாணவர்கள்பயன்படுத்த வேண்டும். இங்கே எதுவும் தரமாட்டோம் என்றும் அண்ணா பல்கலைக்கழகஊழியர்கள் பதில் கூறினர்.

இதையடுத்து பெற்றோரும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பம் அடைந்தனர்.ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ப்ளஸ் டூ தேர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில்படுடென்சனில் வந்திருந்த மாணவ, மாணவர்கள் எங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள் எனசண்டையிட்டனர்.

நாங்கள் அலுவலகங்ளில் பெர்மிஷன் போட்டுவிட்டு வந்தோம். பொறுப்பில்லாமல் பதில்கூறுகிறீர்கள் என பெற்றோர்களும் மோதலில் இறங்கினர்.

இதையடுத்து இன்டெர்நெட்டில் தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களை பல்கலைக்கழகஊழியர்கள் டெளன்லோட் செய்து அதை நகல்களாக எடுத்து பெற்றோர் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு வினியோகித்தனர்.

ஆனால், விளக்க ஏடுகளை (prospectus) வழங்கவில்லை. கல்லூரிகள், படிப்புகள், பாடத் திட்டங்கள் குறித்தஎந்த விவரங்களும் இல்லாமல் வெறும் விண்ணப்பப் படிவத்தை வைததுக் கொண்டு என்ன செய்வது என்றுமீண்டும் பெற்றோருக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது பேசிய ஊழியர்கள் இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துக்கானடி.டியையும் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினால் தான் தொழிற்கல்விக்குவிண்ணப்பிப்பதற்கான உரிய விண்ணப்பங்களும் விளக்க ஏடுகளும் அனுப்பி வைக்கப்படும் எனவிளக்கம் தந்தனர்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான பாலகுருசாமியிடம் கேட்டபோது,

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று நாங்கள் எங்கேயும்குறிப்பிடவே இல்லை. இன்டர்நெட்டிலிருந்து விண்ணப்பங்களை "டவுன்லோட்" செய்து "பிரின்ட்அவுட்" எடுத்து அதை நிரப்பி அனுப்பலாம். அல்லது அவற்றை ஜெராக்ஸ் பிரதி எடுத்தோ, தனியாக"டைப்" செய்தோ கூட நிரப்பி அனுப்பலாம்.

நாங்கள் கொடுத்திருந்த விளம்பரத்தில் இன்டர்நெட் மூலமாகத்தான் இன்று முதல் விண்ணப்பங்கள்வினியோகம் செய்யப்படும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

நேரடியாக விண்ணப்பங்கள் கொடுக்கும் முறையை நிறுத்தி இரண்டு, மூன்று ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த விண்ணப்பங்களையும் டி.டியையும் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் விளக்கஏடுகளை நாங்கள் அனுப்பி வைப்போம் என்றார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+