ஆணி செருப்புடன் பெண்கள் மீது நடந்த பூசாரி: கோவை அருகே "பகீர்" திருவிழா

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் அருகே பூச்சியூரில் பெண்கள் மீது ஆணி செருப்பை அணிந்து பூசாரி நடந்து வரும்திருவிழா நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த பூச்சியூரில் இந்த முள் படுக்கைதிருவிழா நடந்தது.

இங்குள்ள வேட்டைக்கார சுவாமி திருக்கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பெரிய ஆரியகுல தாயாதிகள் சார்பாக திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதியேகொடியேற்றத்துடன் விழா தொடங்கி விட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை முள் படுக்கை திருவிழா தொடங்கியது. வேட்டைக்கார சுவாமிமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு காலை 7.30 மணிக்கு திருவீதி உலாவைத் தொடங்கினார்.

அப்போது பெண்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு சுவாமியைவணங்கியபடியே தரையில் கால்களை நன்றாக நீட்டிக் கொண்டு குப்புறப் படுத்துக் கொண்டனர்.

இதையடுத்து சுவாமியின் "அருள் பெற்ற" பூசாரி ஒருவர் தன் காலில் ஆணிகளால் ஆன செருப்பைஅணிந்து கொண்டு அந்தப் பெண்களின் மீது நடந்து வந்தார்.

தங்கள் வேண்டுதல்கள் நிறைவேண்டும் என்பதற்காக ஆணி செருப்பின் மிதிகளை அந்தப் பெண்கள்பொறுத்துக் கொண்டு சுவாமியை வணங்கிய படி கிடந்தனர். ஒரு சில பெண்களுக்கு ரத்தம்கொட்டினாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு சுவாமியை வணங்கிச்சென்றனர்.

வேண்டுதல்களுக்காக சிறுமிகளை மண்ணில் புதைத்து எடுப்பது உள்ளிட்ட பூஜைகளை அரசு தடுத்தபோதிலும் இதுபோன்ற மனிதர்களை வதைக்கும் வேண்டுதல் முறைகள் தமிழகத்தின் பலகோவில்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ரத்தம் குடிக்கும் திருவிழா:

இதற்கிடையே சேலம் அருகே பல இடங்களில் ஆடு, கோழிகளின் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக்குடிக்கும் கொடூர திருவிழாவும் நடைபெற்றுள்ளது.

"மயான கொள்ளை" என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா சேலம் குமாரசாமிப்பட்டி, ஜான்சன்பேட்டை காலனி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் நடைபெற்றது.

திருவிழாவின்போது உடுக்கை அடித்துக் கொண்டு கையில் கம்புகளுடன் அருள் வந்த பக்தர்கள்தாறுமாறாக ஓடினர். வழியில் மற்ற பக்தர்கள் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டனர். அவர்கள்மீது அருள் வந்த பக்தர்கள் "தபதப"வென்று மிதித்துக் கொண்டு ஓடினர். இவ்வாறு செய்தால்பக்தர்களுக்கு நோய்கள் தீரும் என்பது ஐதீகமாம்.

இதன் பின்னர் அருள் வந்த பக்தர்கள் சுடுகாட்டை நோக்கி ஓடினார்கள். அப்போது வழியில் வேறுசில பக்தர்கள் தரும் ஆடு, கோழி ஆகியவற்றின் கழுத்தைக் கடித்து அவர்கள் ரத்தம் குடித்த காட்சிபடுகோரமாக இருந்தது.

இன்னும் சிலர் சுடுகாட்டில் கிடந்த எலும்புத் துண்டுகளை எடுத்து வாயில் கவ்வியபடி வந்த காட்சிஅதை விடப் பயங்கரமாக இருந்தது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+