பள்ளி வாசல்களில் அன்னதான திட்டம்: முஸ்லீம் லீக் எதிர்ப்பு
சென்னை:
கோவில்களைத் தொடர்ந்து தர்கா மற்றும் பள்ளிவாசல்களிலும் இலவச அன்னதானத் திட்டத்தை தமிழக அரசுதொடங்கியுள்ளது.
வக்பு வாரியத்தின் மூலம் இத் திட்டம் அமலாக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளபுகழ்பெற்ற ஹஜ்ரத் சையத் மூசா காதிரி தர்காவில் இன்று ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி ஜெயலலிதாஇத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்துக்கு முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் தான் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.மேலும் பல கோவில்களுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இப்போது 144 கோவில்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. ஏழை, எளியவர்களுக்கும், பக்தர்களுக்கும் இக் கோவில்களில் இலவச மதிய உணவுவழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான செலவு அந்தந்தப் பகுதியில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் மற்றும் முதல்வரிடம் பெரியநிறுவனங்களும், தொழிலதிபர்களும் தரும் நன்கொடைகள் மூலம் சமாளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்கள் (தர்காக்கள்) மற்றும் பள்ளிவாசல்களிலும்வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதாதொடங்கியுள்ளார்.
முஸ்லீம் லீக்:
தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர்பேராசிரியர் கே.எம். காதல் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இலவச உணவு வழங்கும்திட்டம் அறிவிக்கப்பட்டது.
தர்காக்களும் பள்ளிவாசல்களும் தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல. அவற்றைக் கண்காணிக்கும்அதிகாரம் மட்டுமே தமிழக அரசின் வக்பு வாரியத்துக்கு உண்டு. தர்கா என்பது இஸ்லாமிய புனிதத் தலைவர்கள்அடக்கமான ஸ்தலம் ஆகும். இங்கு முஸ்லீம்கள் மட்டுமின்றி இந்துக்களும், பிற மதத்தினரும் வந்து வழிபாடுசெய்கின்றனர்.
பள்ளிவாசல் என்பது 5 வேளை இறை வழிபாடு நடக்கும் இடம். இங்கு முஸ்லீம்கள் மட்டுமே வருவார்கள்.அவர்கள் தொழுவதற்காக வருபவர்கள். இங்கு உணவு வழங்கும் மரபே கிடையாது. இந்தப் பள்ளிவாசலில்யாருக்கு அன்னதானம் வழங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இதனால் கோவில்களில் வழங்குவது போல பள்ளிவாசல்களில் அன்னதானம் வழங்கத் தேவையில்லை. இதுஇஸ்லாமிய நடைமுறைக்கு ஒத்து வாரதது. இதனால் இத் திட்டத்தை உடனே நிறுத்துக் கொள்வது தான் அரசுக்குநல்லது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு:
இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்துக் கோவில்களில் அன்னதானம் செய்வதையே மக்கள் ஏற்கவில்லை. கோவில்களில் 200 பேருக்கு டோக்கன்தருகிறார்கள். அது கூட உண்மையான பக்தர்களுக்கு கிடைப்பது இல்லை. இது ஒரு வேண்டாத திட்டம். இப்போதுஇஸ்லாமிய பள்ளிவாசல்களிலும் இத் திட்டத்தை அமலாக்கியிருப்பதை உண்மையான முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது அவர்களை ஏமாற்றக் கொண்டு வந்துள்ள திட்டம் இது.இது தங்களை ஏமாற்றும் திட்டம் என்பது முஸ்லீம்களுக்கும் தெரியும்.
முஸ்லீம்கள் விழாக்களின்போது தங்களுக்குள் பணம் வசூலித்து சமைத்து தாங்களும் உண்டு, பிற மதத்தின்ஏழைகளுக்கும் வழங்கி மகிழ்வார்கள். இது போன்ற பிச்சைக்காரத் திட்டத்தை அவக்கள் ஏற்கவே மாட்டார்கள்.இது அவர்களை புண்படுத்தி அவமானப்படுத்தும் செயல். ஜெயலலிதா தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருக்கிறார்.
அதிமுகவை ஆதரிக்கும் முஸ்லீம் லீக் கூட இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றார்சோ.பாலகிருஷ்ணன்.
-->












Click it and Unblock the Notifications