மதுரை பல்கலையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. மாணவர்களின் தகிடுதித்தங்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் "பிட்" அடித்தது உள்பட பல்வேறு தேர்வு விதிமுறைகளைமீறிய 2 எம்.பி.ஏ. மற்றும் 6 எம்.சி.ஏ. மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் பல்வேறு படிப்புகளைஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவற்றில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.ஆகிய முக்கியப் படிப்புகளும் அடங்கும்.

தேர்வு விதிமுறைகளில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பொன்னுச்சாமி சமீபத்தில்தான் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.

இந்நிலையில் கம்ப்யூட்டர் படிப்பான எம்.சி.ஏவுக்கான தேர்வின் போது மூன்று மாணவர்கள்தங்களுடைய கூடுதல் விடைத் தாள்களில் குளறுபடி செய்திருந்தனர்.

அதாவது அவர்கள் எழுதிக் கொண்டு வந்திருந்த விடைத் தாள்களை பிரதான விடைத் தாள்களுடன்இணைத்துக் கொடுத்திருந்தனர்.

இவற்றை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும்அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்வுகளை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தேர்வில் "பிட்" அடித்த மூன்று எம்.சி.ஏ. மாணவர்களும் பிடிபட்டனர்.

இந்நிலையில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களில் ஒருவருடைய ஆய்வறிக்கையை (project report)திருத்தியபோது அது ஏற்கனவே முந்தைய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட வேறு ஒருவரின்ஆய்வறிக்கையைப் போலவே இருந்தது.

சந்தேகப்பட்டு மேலும் உற்றுப் பார்க்கும் போதுதான் அது அப்படியே ஜெராக்ஸ் எடுத்துசமர்ப்பிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதே போல் மற்றொரு எம்.பி.ஏ. மாணவரும் முந்தைய ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டஆய்வறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பித்திருந்தார்.

இந்த மோசடியைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய பல்கலைக்கழக ஒழுங்குநடவடிக்கைக் குழுவினர் மீண்டும் அந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டனர்.

இதற்கிடையே இரண்டு மாணவிகளின் விடைத் தாள்கள் ஒரே கையெழுத்தில் இருப்பதும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் முன் அந்தமாணவிகள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+