20 ஆண்டுகளாக போராடிய ராமநாதபுரம் மன்னரின் 87 வாரிசுகளுக்கு "விடிவு காலம்"
சென்னை:
ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் சட்டப் பூர்வவாரிசுகளான 87 பேருக்கு மாதந் தோறும் தலா ரூ.500 ஓய்வூதியம் வழங்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
மாமன்னர் சேதுபதி மக்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் செளரிராஜன் இது தொடர்பாக தமிழகஅரசிடம் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் மன்னர் சேதுபதி, பூலித்தேவன், மருது பாண்டியர், சுந்தரலிங்கம் ஆகியோரின் வாரிசுகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, தற்போது ராமநாதபுரம் மன்னரின் 87 சட்டப் பூர்வமானவாரிசுகளுக்கு மாதந்தோறும் ரூ.500 ஓய்வூதியம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஜயக்குமார் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்வார் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதியம் பெறுவதற்காக மன்னர் சேதுபதியின் 87 வாரிசுகளும் கடந்த 20 வருடமாகப்போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications