ஈராக்: இ-மெயில்களை உளவு பார்க்கும் அமெரிக்கா
பாக்தாத்:
ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர்களின் உத்தரவுப்படி தன்னிடமுள்ள அல்-சமத் 2 வகை ஏவுகணைகளை ஈராக்தொடர்ந்து அழித்து வருகிறது.
ஐ,நா. பார்வையாளர்கள் கண்காணிப்பின் கீழ் இந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 8ஏவுகணைகளை ஈராக் அழித்துவிட்டது. நூற்றுக்கணக்கில் உள்ள இந்த ஏவுகணைகளை அழிக்கும் பணிகள்தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதே நேரத்தில் அமெரிக்கா எங்களைத் தாக்கும் என்பது உறுதியாகிவிட்டால் அடுத்த நிமிடமே ஏவுகணைகளைஅழிக்கும் பணியை கைவிட்டுவிடுவோம் என ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் எச்சரித்துள்ளார்.
இதனால் ஈராக்கைத் தாக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முடிவுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்தப் போரைத் தவிர்க்கும் வகையில் சதாம் ஹூசேன் பதவி விலகிட வேண்டும் என பஹ்ரைன் மற்றும் குவைத்ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. எகிப்தில் நடந்து வரும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்கூட்டத்தில் இக் கோரிக்கை வைக்கப்பட்டது.
முன்னதாக சவுதி அரேபியாவும் இக் கோரிக்கையை வைத்தது. அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டுஇஸ்லாமிய நாடுகளை காட்டிக் கொடுப்பதாக சவுதி அரேபியாவை லிபிய அதிபர் கடாபி தாக்கிப் பேசினார்.இதற்கு சவுதி மன்னரிடமிருந்து மிகக் கடுமையான பதில் வந்தது. உன் வாயை மூடிக் கொண்டு இரு என சர்வதேசக்கூட்டத்தில் வைத்து கடாபியை ஒருமையில் திட்டினார் சவுதி மன்னர்.
பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஈராக்கைத் தாக்க வேண்டிய அவசியம் இல்லை என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தில் கையெழுத்திட்ட சவுதி அரேபியா, குவைத், துருக்கிஉள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஈராக்கைத் தாக்க தனது நாட்டு ராணுவ மற்றும் விமானப் படைத் தளங்களை அமெரிக்காவுக்குத் தரதுருக்கி அதிபர் முன் வந்துள்ளார். ஆனால், அந் நாட்டு நாடாளுமன்றம் இந்த யோசனையை நிராகரித்துவிட்டது.இதனால் துருக்கியில் இருந்து படைகளை அமெரிக்கா வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், ஈராக்கைத் தாக்குவதில் இன்னும் தீவிரமாக உள்ளது அமெரிக்கா. தனது படைகளைத் தொடர்ந்து குவித்துவருகிறது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உள்ள நாடுகளின் தூதர்களுக்கு வரும் இ-மெயில்களை இடைமறித்து செய்திகளைஅறியும் ரகசியப் பணியிலும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் ஈடுபட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக உள்ள ஜெர்மன் மற்றும் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நிரந்தரநாடுகளும் தாற்காலிக உறுப்பினர்களாக உள்ள பல ஆப்பிரிக்க நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்துவருகின்றன.
தங்களது தொலைபேசி ஆலோசனைகளை அமெரிக்கா ஒட்டுக் கேட்கலாம் என்பதால் இந்த நாடுகளின் தூதர்கள்தங்கள் நாட்டுத் தலைவர்களுடன் இ-மெயில்கள் மூலமே தொடர்பு கொண்டு வருகின்றனர். இப்போது இந்தமெயில் சர்வர்களையும் ஹேக் செய்து தகவலைத் திரட்டும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே ஜெர்மன் அதிபர் ஜேகானஸ் ரவு இன்று இந்தியா வந்துள்ளார். 5 நாட்கள் இந்தியாவில்தங்கியிருக்கும் அவர் ஈராக் விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய், ஜனாதிபதி கலாம் ஆகியோருடன் ஆலோசனைநடத்துவார். ஈராக்கைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு பெரும் தடையாக இருப்பது ஜெர்மன் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வரும் முதல் ஜெர்மன் அதிபர் இவர் தான்.
-->












Click it and Unblock the Notifications