பாம்பு கடித்த மாணவனை காப்பாற்றிய ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கத்தில் பாம்பு கடித்து மயங்கிவிழுந்த மாணவனை தனது மொபட்டில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துஅவன் உயிரைக் காப்பாற்றிய பள்ளி ஆசிரியையை அனைவரும் பாராட்டினர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊனமலை கிராமத்தில் உள்ள ஒன்றியநடுநலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் மாணவன் திவாகர்.

சிறுநீர் கழிப்பதற்காக பள்ளிக்குப் பின்புறம் உள்ள மரம், செடி நிறைந்த இடத்திற்கு சென்றான்திவாகர். அப்போது அங்கிருந்த பாம்பு அவனைக் கடித்துள்ளது. இதையடுத்து அவன் மயங்கினான்.

பாம்பு கடித்த தகவலைக் கேள்விப்பட்ட பள்ளி ஆசிரியை கோமதி உடனடியாக அவனுக்குமுதலுதவிகளைச் செய்து, தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு மதுராந்தகம் விரைந்தார். அங்குள்ளஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் திவாகர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிதுநேரத்திலேயே உயிர் பிழைத்து எழுந்தான்.

ஆசிரியையின் சமயோஜிதமான இந்தச் செயலை பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள்,திவாகரின் பெற்றோர் ஆகியோர் பாராட்டினர். சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் மாணவனின்உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று டாக்டர்களும் தெரிவித்தனர்.

ஊனமலையிலிருந்து மதுராந்தகம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. தனது மொபட்டில் இன்னொருமாணவனை அமர வைத்து அந்த மாணவனின் மடியில் திவாகரை உட்கார வைத்துக் கொண்டுமிகுந்த சிரமத்துடன் மருத்துவமனைக்கு கோமதி வந்து சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+