திருட்டு வி.சி.டி.: ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க திரையுலகினர் முடிவு
சென்னை:
திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்கக் கோரி கோட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்று முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் திருட்டு வி.சி.டிக்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இன்று வெளியான புத்தம் புதிய திரைப்படத்தின் திருட்டு வி.சி.டி. உடனடியாக வெளியாகிவிடுகிறது.
மறுநாளே அதன் ஆயிரக்கணக்கான பிரதிகள் தயார் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும்விற்கப்படுகின்றன. அன்று இரவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அந்தப் படத்தை டி.விக்களில்திரையிட்டும் விடுகின்றனர்.
நாள்தோறும் அதிரடிச் சோதனையில் ஆயிரக்கணக்கான திருட்டு வி.சி.டிக்கள்கைப்பற்றப்பட்டாலும், அவற்றின் எண்ணிக்கை புற்றீசல் போலப் பெருக்கெடுத்துக் கொண்டுதான்உள்ளன. மேலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் திருட்டு வி.சி.டிக்கள்தமிழகத்திற்குக் கடத்தப்படுகின்றன.
இதனால் தியேட்டருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால்சினிமா தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்சங்கத்தின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளர்சங்கத்தின் தலைவரான முரளிதரன் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ஏவி.எம். சரவணன், பஞ்சு அருணாசலம், இப்ராகிம் ராவுத்தர், கே. ராஜன், எஸ்.ஏ. சந்திரசேகரன்,சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன் உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டஇந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவரான விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
மேலும் இயக்குநர்கள் செல்வமணி, வி. சேகர், டி.பி. கஜேந்திரன், ராஜகுமாரன், சரண், முருகதாஸ்,ஆர். செல்வராஜ் மற்றும் நடிகர்கள் எஸ்.வி. சேகர், ரமேஷ் கண்ணா ஆகியோரும் இக்கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், திருட்டு வி.சி.டிக்களை ஒழிப்பதற்காக போராட்டக் குழுவை அமைப்பதுஎன்றும் அதற்கு விஜயகாந்த் தலைமை வகிப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி போராட்டக் குழுவினர் ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றுஜெயலலிதாவிடம் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றைக் கொடுப்பார்கள் என்றும்கூறப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,
ஒரு படத்தை எடுப்பதற்கான பணத்தை செலவழிப்பது தயாரிப்பாளர். அதை வினியோகஸ்தர்கள்வெளியிடுகிறார்கள்.
இதற்கு இடையே எவன் எவனோ வந்து திருட்டு வி.சி.டிக்களை தயாரித்து வெளியிடுவதைபார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
திருட்டு வி.சி.டிக்களை ஒழிக்கக் கோரி தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்-நடிகைகள்உள்ளிட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து மனு கொடுக்க முடிவுசெய்துள்ளோம்.
இது தொடர்பாக வரும் 8ம் தேதி அனைத்து தரப்பினருடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்என்றார் விஜயகாந்த்.
-->












Click it and Unblock the Notifications