விரைவில் தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்?
சென்னை:
தமிழக அமைச்சரவை விரைவில் மீண்டும் மாற்றப்பட உள்ளது. இந்த முறை பெரிய அளவிலானமாற்றங்களைச் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பல முறை அமைச்சரவையைமாற்றியுள்ளார் ஜெயலலிதா. சில அமைச்சர்கள் பதவிகளை இழந்தனர். பலர் மீண்டும்சேர்க்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைக்க ஜெயலலிதா முடிவுசெய்துள்ளார்.
சபாநாயகர் காளிமுத்துவை அந்தப் பதவியிலிருந்து தூக்கி விட்டு அவரை அமைச்சராக்கத்திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா. கடந்த முறை அமைச்சரவை மாற்றத்தின்போது பதவியைப் பறிகொடுத்த தம்பித்துரையை சபாநாயகராக்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த முறை அமைச்சரவையிலிருந்து நான்கு தலைகள் "உருளும்" என்று தெரிகிறது. மேலும் முன்னர்அமைச்சர் பதவியை இழந்த சண்முகவேல் மீண்டும் அமைச்சராவார் என்று தெரிகிறது.சாத்தான்குளம் தொகுதியில சிறப்பாகத் தேர்தல் பணி ஆற்றியதற்காக அவருக்கு இந்தப் பரிசு என்றுகூறப்படுகிறது.
அதேபோல் கடந்த முறை பதவியை இழந்த தனபாலுவுக்கும் இம்முறை அதிர்ஷ்டம் அடிக்கும் என்றுதெரிகிறது. தற்போதைய மின் துறை அமைச்சரான நயினார் நாகேந்திரனுக்கு பொதுப்பணித் துறைவழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்நடைபெற்றது. இதில் தமிழக பட்ஜெட்டில் போட வேண்டிய வரிகள், சாத்தான்குளத்தில் பிரச்சாரநேரத்தில் தரப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது ஆகிய விவகாரங்கள் குறித்துஅமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினர்.
மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளில் சிலவற்றைத் திருப்பித் தருவதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20 அல்லது 24ம் தேதி தொடங்க உள்ளது.கூட்டத் தொடரின் முதல் நாளே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிடும்.
-->












Click it and Unblock the Notifications